சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 12, 2022
Advertisement
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை: வெறும் வாயை மெல்லும், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளுக்கு அவல் கொடுத்தது போல, கோவில்களை மூடி- விட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது ஏன்?தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உங்களுக்கே, இந்த அரசின் செயல்பாடு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றால், பொதுமக்களுக்கு இன்னும்

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை: வெறும் வாயை மெல்லும், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளுக்கு அவல் கொடுத்தது போல, கோவில்களை மூடி- விட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது ஏன்?தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உங்களுக்கே, இந்த அரசின் செயல்பாடு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றால், பொதுமக்களுக்கு இன்னும் அதிகமாகத் தானே ஏற்படுத்தும்...


த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை:
கர்நாடகாவில், மேகதாது அணை கட்ட வலியுறுத்தி, அந்த மாநில காங்கிரசார் அங்கு, 11 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். இது, தமிழக நலனுக்கு எதிரானதால், தமிழகத்தில் கூட்டணியாக இருக்கும், காங்., - தி.மு.க., கட்சிகள் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.நன்கு தெரிந்தும், அப்படி ஒரு யாத்திரை நடப்பது போலவே, அவ்விரு கட்சிகளும் காட்டிக் கொள்ளாது. அந்த அளவுக்கு சிறப்பாக அரசியல் செய்வது அக்கட்சிகளின் வழக்கமே!


தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:
'ஒமைக்ரான்' மிக வேகமாக பரவுகிறது, கொரோனா காரணமாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 'டாஸ்மாக்' மதுபான கடைகள், மதுகூடங்கள், தியேட்டர்கள் இன்னும் திறந்திருக்கின்றன. பேருந்துகளும் ஓடுகின்றன. எனினும், கோவில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளன.கோவில்களை மூடி, ஹிந்து மத வழிபாட்டை தடை செய்து, ஹிந்துக்களுக்கு எரிச்சலை ஊட்டுவது தானே, இந்த அரசின் செயல். பிறகு, அப்படித் தானே செய்வர்...


புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை:
திராவிடம் பேசுபவர்களுக்கு, 'நீட்'டுக்கு எதிராக பேசுவதை தவிர எந்த புள்ளிவிபரமும் தெரியாது. நீட் தேர்வு அவசியமா என ஆய்வு செய்த, ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூட சொல்லும்படியாக ஏதும் இல்லை.டாக்டரான உங்களுக்குத் தான், ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க கிடைக்கும் வாய்ப்பு, நீட் எதிர்ப்பால் கிடைக்காமல் போவது புரியும்!


ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமார் அறிக்கை
: ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறந்து விட்டு, தமிழர்களின் முக்கிய பொங்கல் பண்டிகையின் போது அடைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பு, தி.மு.க.,வின் இரட்டை நாக்கை காட்டுகிறது.நீங்கள் என்ன எதிர்ப்பை காட்டினாலும், கோவில்களை அடைக்க, கொரோனா உள்ளது என்ற வலுவான காரணம், தமிழக அரசுக்கு கிடைத்துள்ளதே!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X