ஈரோடு மாவட்ட, 'போக்சோ' கண்காணிப்புக் குழு தலைவரான அசோக்: பெண் பிள்ளைகளுக்கான சூழல் மோசமாகத் தான் இருக்கிறது என்றாலும், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு குடும்பமும், 'அலெர்ட்'டாக இருந்தாலே முக்கால்வாசி பிரச்னை தீர்ந்து விடும். அம்மாக்களுக்கு இந்த விஷயத்தில் மிக மிக பெரிய பொறுப்பு இருக்கிறது. வக்கிரத்தில் இருந்து தன் பிள்ளைகளைக் காக்க இந்த ஐந்து கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும்... அப்பா உட்பட அத்தனை ஆண்களும், பெண் குழந்தைகளிடம் இருந்து நாகரிகமான இடைவெளி விட்டுத் தான் பழக அனுமதிக்க வேண்டும். தடு, சத்தமிடு, ஓடு--. - யார் தொட்டாலும் எதிர்ப்பு தெரிவித்து தடுப்பதற்கும், மீறினால் சத்தம் கொடுத்து உதவிக்கு ஆட்களை அழைக்கவும், அதையும் தாண்டி, உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் கற்றுக் கொடுங்கள். இன்று பெண் பிள்ளைகளை வீழ்த்தும் மிகப் பெரிய ஆயுதமாக இருக்கிறது, மொபைல் போன். ஆன்லைன் வகுப்பு நடக்கையிலும், மற்ற பயன்பாடுகளையும் கண்டிப்பாக கண்காணியுங்கள். பெண் பிள்ளைகளில், 99 சதவீதம் பேர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினரால் தான் சீரழிக்கப்படுகின்றனர்.
எனவே, தனியே இருக்கும் பெண் குழந்தைக்கு உறவினரின் அன்பு, அக்கம் பக்கத்தினரின் பரிவு, பாசம் போன்றவற்றை அனுமதிக்கவே வேண்டாம். 'குட் டச், பேட் டச்' என்பதெல்லாம் போய், 'நோ டச்' மட்டுமே இப்போதைய ஒரே பாடம். அதையும் மீறி யாராவது தொட்டால், உடல் பாகம் குறித்து மொபைல் போனில் பேசினால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக தாயிடம் சொல்வதற்கு கட்டாயப்படுத்த வேண்டும்.இந்த ஐந்து கட்டளை களையும் பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பது மட்டுமின்றி, ஒரு தோழியைப் போன்று தினமும் சிறிது நேரமாவது அன்பாகவும், ஆதரவாகவும் பேச வேண்டும். அன்றாடம் பள்ளியில் தோழிகளுடன் என்னவெல்லாம் நடந்தது என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
'அம்மாவிடம் சொன்னால் கொன்று விடுவேன், உன் குடும்பத்தை அழித்து விடுவேன்' என்று யார் மிரட்டினாலும், உடனே பெற்றோரிடம் சொல்லச் சொல்லிவிட வேண்டும். 'தேவை என்றால் போலீசில் சொல்லலாம்' என்று 'ஹெல்ப்லைன்' நம்பரையும் பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து தைரியமூட்ட வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்வது அவசியம். இதையெல்லாம் அறிந்து வலிமையாக எதிர்த்து நிற்கும் பெண் பிள்ளைகளை, நெருங்க ஆண்கள் நிச்சயம் பயப்படுவர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement