திருடச் சென்ற வீட்டில் சமைத்து சிக்கிய திருடன்

Added : ஜன 13, 2022 | கருத்துகள் (6)
Share
Advertisement
கவுஹாத்தி :அசாமில் திருடச் சென்ற வீட்டிற்குள், 'கிச்சடி' சமைத்த திருடன், போலீசாரிடம் சிக்கிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுஹாத்தியின் ஹெங்கராபரி என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாததை அறிந்து கொண்ட திருடன் ஒருவன், அந்த வீட்டிற்குள் நுழைந்து உள்ளான்.திருடச்
திருடச் சென்ற வீட்டில் சமைத்து சிக்கிய திருடன்

கவுஹாத்தி :அசாமில் திருடச் சென்ற வீட்டிற்குள், 'கிச்சடி' சமைத்த திருடன், போலீசாரிடம் சிக்கிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுஹாத்தியின் ஹெங்கராபரி என்ற பகுதியில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாததை அறிந்து கொண்ட திருடன் ஒருவன், அந்த வீட்டிற்குள் நுழைந்து உள்ளான்.
திருடச் சென்ற அவனுக்கு பசி எடுக்கவே, திருடுவதை மறந்துவிட்டு, சமையலறைக்கு சென்றுள்ளான். அங்கு உணவு ஏதும் இல்லாததால், தனக்கு பிடித்தமான கிச்சடியை சமைத்து உள்ளான்.
பூட்டிய வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை பார்த்து சந்தேகித்த அக்கம் பக்கத்தினர், திருடனை மடக்கிப் பிடித்தனர். போலீசாரிடமும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த திருடனை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின், சிறையில் அடைக்கப்பட்ட அவனுக்கு, போலீசார் உணவு வாங்கிக் கொடுத்தனர்.திருட வந்தவன் கிச்சடி சமைத்து சிக்கிய சம்பவம், மிகவும் வேடிக்கையாக இருந்ததாக அப்பகுதி மக்கள் புன்னகைத்தப்படி தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
14-ஜன-202206:38:18 IST Report Abuse
S.kausalya வந்தோமா, வந்த வேலையை paarththomaa என்று இருக்கணும்.. நம் அரசியல் திருடர்களை பாருங்கள் ஆட்சிக்கு வந்த vudan எப்படி மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கலாம்.என்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். 5 வருடங்களுக்கு வேறு எந்த சிந்தனையும் வைப்பதே கிடையாது. சில மணி துளியில் தம் வேலையான திருட்டை செய்து விட்டு வெற்றிகரமாக ஓடி போவதை விட்டு சமைத்தானாம், சாப்பிட்டானம். மாட்டிக்கொண்டு விட்டான். போதாத காலம்..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-ஜன-202216:03:01 IST Report Abuse
sankaseshan ஏற்கனவே திருடர்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கிறது
Rate this:
Cancel
Mani - California,யூ.எஸ்.ஏ
13-ஜன-202213:46:47 IST Report Abuse
Mani > அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது இதற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X