வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய போலி பேராசிரியர் கைது

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (35)
Advertisement
வேலூர் : வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ் கொடுத்து 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவர் 2010ம் ஆண்டு முதல் வேலுார் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.புகாரின் படி இவரது
போலி சான்றிதழ், போலி பேராசிரியர், கைது, 10 ஆண்டுகள், திருவள்ளூர் பல்கலை, சாதி சான்றிதழ், குற்றப் பிரிவு போலீஸ்,


வேலூர் : வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ் கொடுத்து 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், காட்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவர் 2010ம் ஆண்டு முதல் வேலுார் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

புகாரின் படி இவரது கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், எம்.ஏ., கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை போலி என்பதும், இதை கொண்டு 10 ஆண்டுகள் இவர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கடந்தாண்டு செப்., மாதம் 2 ம் தேதி பன்னீர்செல்வத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
16-ஜன-202210:41:55 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN அப்படிப் பார்த்தால் திராவிட தமிழகத்தில் இப்படிப் பட்ட """"""பல்லிளிக்கும் கழகங்களை""""""" மூட வேண்டியிருக்குமோ என்னவோ?
Rate this:
Cancel
Malarvizhi - Hyderabad,இந்தியா
13-ஜன-202214:15:52 IST Report Abuse
Malarvizhi போலி சாதி சான்றிதழ் வைத்திருந்தவர் பணிநீக்கம். நீர்வழித்தடத்தில் கட்டிடம் கட்டினாள் கட்டிடம் இடிப்பு. ஆனால் போலி சாதி சான்றிதழ் கொடுத்த / கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்த அரசு ஊழியர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? லோக் பால் / லோக் ஆயுக்தா நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
13-ஜன-202212:51:05 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இதே போல் போலி பட்டங்கலய் போட்டு கொண்டு ஆட்சியில் இருக்கும் ஆட்களை எதுவும் செய்ய முடியாதோ
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
13-ஜன-202216:56:06 IST Report Abuse
DVRRடாக்டர் கலைஞர் டாக்டர் ஜெயலலிதா????இதெல்லாம் பட்டமா இல்லை பொட்டலமா?????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X