வைகுண்ட ஏகாதசி விழா - பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (9)
Advertisement
காஞ்சிபுரம் : தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்திலுள்ள வைணவ திருத்தலங்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி விழா,
வைகுண்ட ஏகாதசி விழா,சொர்க்கவாசல்,பக்தர்கள், தரிசனத்திற்கு தடை, வைணவ தலங்கள், வைகுண்டப் பெருமாள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம் : தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


latest tamil news




தமிழகத்திலுள்ள வைணவ திருத்தலங்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி விழா, கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.



வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் உடன் பெருமாள் அருள்பாலித்தார். இந்த ஆண்டு விழா நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் திறப்பின் போது தடை விதிக்கப்பட்டது.



திருப்பதியில்...

வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிட் கட்டுப்பாடு காரணமாக, முக்கிய பிரமுகர்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
14-ஜன-202210:58:54 IST Report Abuse
raja டெக்னாலஜி முன்னேறி இருக்கிறதே நண்பா...
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
13-ஜன-202214:54:19 IST Report Abuse
K.P  SARATHI எல்லாம் மாநிலத்து இந்துக்கள் ஒன்றாக சேரவேண்டும் கோவிலுக்குள் செல்லும் நாம் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும் பணக்கார ஹிந்து பொருள் உதவி செய்ய வேண்டும் இது நடக்குமா
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
13-ஜன-202211:38:11 IST Report Abuse
சீனி கோவிந்தா, கோவிந்தா, ரங்கா, ரங்கா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X