சுங்கச்சாவடிகளில் பொங்கல் நெரிசல்; தீர்க்குமா நெடுஞ்சாலை ஆணையம்?

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (11)
Advertisement
சென்னை : சுங்கச்சாவடிகளில் பொங்கல் பண்டிகை நேரத்தில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள 5,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் பணமாக கட்டணம் செலுத்த தடை
சுங்கச்சாவடி, பொங்கல், நெரிசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சுங்கச்சாவடிகளில் பொங்கல் பண்டிகை நேரத்தில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 5,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் பணமாக கட்டணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 'பாஸ்டேக்' எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிப்பு நடந்து வருகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.


latest tamil news



சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் கருவி மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். பொங்கல் பண்டிகையை ஒட்டி, இன்று முதல் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.இதனால் வானகரம், சூரப்பட்டு, நல்லுார், ஸ்ரீபெரும்புதுார், பரனுார், மாத்துார் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பலரும் அவதிக்கு உள்ளாவர். எனவே, சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Shankar - Chennai,இந்தியா
13-ஜன-202220:19:47 IST Report Abuse
Ravi Shankar இருபது வருடங்களுக்கு மேலானாலும் இன்னும் சுங்கச்சாவடி வசூல் செய்வதை தடுக்காமல் , சாவடியில் லேட்டா போறும்ன்னு ஊடகத்தையும் மக்களையும் மாற்றி கவலை படவைத்ததில் எல்லா மாநில மத்திய கட்சிகளும் ஒன்றுதான். இருபது வருடம் முடிந்தவுடன் ஐந்து ரூபாய் வசூல் செய்த சுங்கச்சாவடிய மூடிய கேரளா எங்கே....மற்ற மாநிலங்கள் எங்கே..... உண்மையில் நாம் தான் ஏமாறிக்கொண்டிருக்கிறோம்...... நேர்மை கிலோ என்ன விலை என்று சொல்லும் எந்த கட்சியும் அரசும் மக்களுக்கு நல்லது செய்யாது என்பதை மக்கள் உணர்ந்து வாழ முற்படும் வரை, இதுதான் வாழ்க்கை. " குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..."
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜன-202213:39:57 IST Report Abuse
J.Isaac முதலில் கொரனோவை விட கொடுமையான சுங்கவரி ஒழிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜன-202213:11:36 IST Report Abuse
J.Isaac முதலில் இந்த கொடுமையான கொரனோ ஒழிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X