வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்: துரைமுருகன் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (29)
Advertisement
சென்னை : 'காரில் சைரன் ஒலியை நிறுத்திய விவகாரத்தில், வரலாறு தெரியாமல் துரைமுருகன் பேச வேண்டாம்' என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், பொங்கல் விழா நேற்று நடந்தது. மகளிர் அணி நிர்வாகிகள் பொங்கல் வைத்து கொண்டினர். மாவட்டத் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில், கட்சியினருக்கு வேட்டி, சேலைகள்
காமராஜர், துரைமுருகன், காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'காரில் சைரன் ஒலியை நிறுத்திய விவகாரத்தில், வரலாறு தெரியாமல் துரைமுருகன் பேச வேண்டாம்' என, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், பொங்கல் விழா நேற்று நடந்தது. மகளிர் அணி நிர்வாகிகள் பொங்கல் வைத்து கொண்டினர். மாவட்டத் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில், கட்சியினருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

சட்டசபை கூட்டத் தொடரில், காமராஜரை பற்றி, அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பான கேள்விக்கு, செல்வப்பெருந்தகை அளித்த பதில்: துரைமுருகன் வயதில் முதிர்ந்தவர்; அனுபவமிக்கவர். அவர், காமராஜர் பற்றி கூறியது வருத்தம் அளிக்கிறது. காமராஜர் போன்ற எளிமையான முதல்வரை உலகமே பார்த்ததில்லை. காமராஜரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும்.


latest tamil newsகாமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், 'நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன்... வாகனத்தில் செல்லும் போது எனக்கு எதுக்கு சைரன் ஒலி எழுப்ப வேண்டும்?' எனக் கூறி, 'சைரன்' ஒலிப்பானை நிறுத்தியவர் காமராஜர். ஆனால், 'காமராஜர், பக்தவச்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி' என, துரைமுருகன் தவறாக கூறியிருக்கிறார். துரைமுருகன் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களும் நேசிக்கின்றனர். துரைமுருகன் தான் பேசியதை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


பிரியங்கா பிறந்த நாள்


காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவுக்கு, தமிழக காங்கிரசில் ஆதரவு கோஷ்டி உருவாகி உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில், தமிழக காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க அலுவலகத்தில், மாநில தலைவர் வி.சி.முனுசாமி தலைமையில், பிரியங்கா பிறந்த நாளை, 'கேக்' வெட்டி கொண்டாடியுள்ளனர்.அதேபோல், சென்னையில் பல்வேறு இடங்களில் பிரியங்கா பிறந்த நாளை காங்கிரசார் கொண்டாடினர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜன-202205:18:01 IST Report Abuse
meenakshisundaram கேட்கிறவன் கேனையன் ஆக இருந்தால் -கேப்பையிலே நெய்யே வடிகிறதுன்னு சொல்றது திமுக விற்கு மிக பொருத்தம் -ம்மொன்னு படி அரிசி .திராவிட நாடு இல்லீன்னா சுடுகாடு .ஹிந்தி திணிப்பு .பிராமண எதிர்ப்பு ,கடவுள் மறுப்பு .ஒன்றே குளம் ஒருவனே தேவன் .விடியல் ..இன்னும் பூராவும் .இதில் துரை முருகன் என்ன விதி விலக்கா ?இதிலே பெயரில் மட்டும் /முருகன் '
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
13-ஜன-202220:49:02 IST Report Abuse
Narayanan always DMK and their carders doesn't know history, maths. But they knew scientific method to do corruptions and collection . They will make lies, but talented to make others to believes that as true. Of course is Dhuraimurugan well trained by karunanithi .
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-ஜன-202216:38:57 IST Report Abuse
DVRR காமராஜரை குறை கூற உரிமை உள்ளவர்கள் ஒரே ஒரு கோஷ்டி தான் அவர்கள் திருட்டு திராவிடர்களாக இருக்க வேண்டும் இல்லை ஊழல் மன்னர்களாக இருக்க வேண்டும் அப்படு தான் நல்லவர்களை பற்றி குறை கூற முடியும். ஏன் சாதாரண மனிதன் என்றும் தன்னிடம் உள்ளதை பற்றி சொல்லமாட்டேன் இன்னொருவரிடம் உள்ளதை பற்றியே குறை சொல்லுவான் அதனால் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X