வல்லரசை நோக்கி இந்தியா செல்கிறது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுச்சேரி: 'இந்திய இளைஞர்கள் உலகிற்கு முன்மாதிரியாக மாற வேண்டும்' என முதல்வர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரியில் நேற்று துவங்கிய தேசிய இளைஞர் விழாவிற்கு முன்னிலை வகித்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:வேகமாக பரவி வரும் கொரோனா 3வது அலை காரணமாக, தேசிய இளைஞர் விழாவை காணொலி வாயிலாக நடத்துகிறோம். ஒருவர் தனது நாட்டுக்கு பங்களிக்க பல வழிகள் உள்ளன. வளம், அறிவியல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுச்சேரி: 'இந்திய இளைஞர்கள் உலகிற்கு முன்மாதிரியாக மாற வேண்டும்' என முதல்வர் ரங்கசாமி பேசினார்.latest tamil newsபுதுச்சேரியில் நேற்று துவங்கிய தேசிய இளைஞர் விழாவிற்கு முன்னிலை வகித்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

வேகமாக பரவி வரும் கொரோனா 3வது அலை காரணமாக, தேசிய இளைஞர் விழாவை காணொலி வாயிலாக நடத்துகிறோம். ஒருவர் தனது நாட்டுக்கு பங்களிக்க பல வழிகள் உள்ளன. வளம், அறிவியல், வணிகம் போன்றவை அதில் சில உதாரணங்கள்.

ஆனால், பண்பு இல்லாத கல்வி, கொடை இல்லாத செல்வம், அறம் இல்லாத வணிகம், மனிதநேயம் இல்லாத அறிவியல் பயனற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூடபண்பு, கொடை, ஒழுக்கம், மனிதநேயம், நன்னடத்தை ஆகியவை ஒரு சிறந்த இந்திய இளைஞருக்கான முக்கியமான மதிப்பீடுகளாகும். வலிமையான இளைஞர்கள் இந்த குணாதிசயங்களை கொண்டிருப்பர்.

இதற்காகத் தான் பயிற்சி எடுத்து வருகிறோம் 'திறமையான இளைஞர், உறுதியான இளைஞர்' என்பதே, 25வது தேசிய இளைஞர் விழா -2022ன் கருப்பொருள்.சமூகத்தை புரட்டிப் போட்ட இளைஞர்களின் அடையாளங்களாகப் போற்றப்படும் பல பெரிய மனிதர்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள் என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவர்.ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் செய்தியை மிக வேகமாக முடித்துள்ளனர் என்றே நான் சொல்வேன். அவர்களைப் பற்றிய இளமை சித்தரிப்பு மட்டுமே நம்மிடம் உள்ளது.


latest tamil news
ஆதி சங்கராச்சாரியார், சுப்ரமணிய பாரதி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் அப்படித்தான்.சுதந்திரப் போராட்டத்தின் போது பல தலைசிறந்த தலைவர்களை புதுச்சேரி தனது அன்புக்கு உரியவர்களாக வைத்திருந்தது. மகரிஷி, அரவிந்தர், பாரதி, வ.வே.சு. ஐயர் போன்ற தலைசிறந்த தலைவர்கள், ஆங்கிலேயரின் பயங்கரமான பிடியில் இருந்து தப்பி, புதுச்சேரியில் வாழ்ந்தவர்கள். சுதேசி கப்பல் நிறுவனத்தை நடத்தி ஆங்கிலேயர்களை திகைக்க வைத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை புதுச்சேரியில் பல நாட்கள் தங்கியிருந்தார்.

காமராஜர், அரசியல் நன்னடத்தையின் சின்னம். பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நபர். 1920களிலேயே புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், புதுச்சேரி காமராஜருக்கு பிரியமான இடமாகும்.


latest tamil news
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படுகின்றன. நான் முன்பு கூறியது போல், நமது பிரதமர் திருக்குறளின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுகிறார். எனவே, நாம் வல்லரசு நிலையை நோக்கி செல்கிறோம்.பொதுவாக மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை மற்றும் பொறுப்பாக் கருதப்படுகிறது. ஆனால் அது திறமையான பணியாளர்களாகவோ, நாட்டிற்கு பங்களிக்கக் கூடிய சக்தியாகவோ மாற்றும்போது, அந்த எண்ணிக்கையே 'மக்கள் தொகை பங்காக' மாறுகிறது.

'ஆத்ம நிர்பர் பாரத்'நடைமுறைக்கு வந்த பிறகு அதுதான் நடக்கிறது, புதுச்சேரியிலும் அதுதான் நடக்கும்.இவ்விழா புத்துணர்ச்சியை அளித்து, புதிய யோசனைகள், படைப்புகளுக்கு இளைஞர்களை அழைத்துச் செல்லட்டும். இளைஞர்கள் உலகிற்கு முன்மாதிரியாக மாற வேண்டும்.வ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RG RG - Chennai,இந்தியா
14-ஜன-202200:06:29 IST Report Abuse
RG RG எந்த வல்லரசை நோக்கி னு சொல்லலியே சார்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஜன-202223:10:00 IST Report Abuse
DARMHAR நல்லவேளை நம்ம "இன்னும் பதினைந்து நாளில் எல்லாம் நட க்கும் " என்று சொல்லுகின்ற நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக இல்லை.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
13-ஜன-202221:36:23 IST Report Abuse
Samathuvan ஆமா இவரு சொல்றது சரிதான். நாம எப்பவும் அ‌ந்த அமெரிக்க வல்லரசை நோக்கி போய் தான் நம்ம குறைகளை சொல்லிக்கிட்டு இருக்கோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X