ஆள் கடத்தல் வழக்கில் சரண் அடைந்தவரிடம் விசாரணை

Added : ஜன 13, 2022 | |
Advertisement
ஈரோடு: ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டவரை, கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்தனர். ஈரோடு, கருங்கல்பாளையம் குயிலன் தோப்பு மரப்பாலம் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சிவா, 57, ரெடிமேட் கடை வைத்துள்ளார். கடந்த, 25 காலை அவரை சிலர் காரில் கடத்தி சென்றனர். 15 லட்சம் ரூபாய் கொடுத்ததும் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து,

ஈரோடு: ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டவரை, கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்தனர். ஈரோடு, கருங்கல்பாளையம் குயிலன் தோப்பு மரப்பாலம் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சிவா, 57, ரெடிமேட் கடை வைத்துள்ளார். கடந்த, 25 காலை அவரை சிலர் காரில் கடத்தி சென்றனர். 15 லட்சம் ரூபாய் கொடுத்ததும் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, ஈரோட்டை சேர்ந்த விஜயகுமார், 46, தர்மராஜ், 37, ராஜா, 42, வெப்படையை சேர்ந்த கவுரிசங்கர், 26, ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்து, தலைமறைவாக இருந்த மூவரை தேடினர். போலீசாரால் தேடப்பட்டு வந்த, கோவை சத்தி ரோடு சாஸ்திரி நகர் பிரபு, 47,. கடந்த, 3ல் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை கோபி சிறையில் அடைத்தனர். அவரை வீரப்பன்சத்திரம் போலீசார், நேற்று கஸ்டடி எடுத்து விசாரித்தனர். தலைமறைவாக உள்ள நபர்கள், அவர்கள் பின்னணி, கைதாகி சிறையில் உள்ள நபர்களுடனான தொடர்பு, ஆள் கடத்தலில் பிற கோஷ்டியினருடனான தொடர்பு குறித்து விசாரித்தனர். ஒரு நாள் கஸ்டடி முடிந்த நிலையில், நேற்று மாலை ஈரோடு நீதிமன்றத்தில் பிரபுவை ஆஜர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X