தனது படை வீரர்களுக்கான பயிற்சி அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருந்தார் நேதாஜி. நிறைவான ராணுவ பயிற்சி முடிந்த பிறகு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவின் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. அந்தக் கொடியில் இராட்டைக்கு பதிலாக பாயும் புலியின் சின்னம் இடம் பெற்றிருந்தது.
ராணுவ வீரர்களுடன் பேசிய நேதாஜி, இந்திய விடுதலைக்காக போரிடும் உங்கள் பெயர்கள் இந்திய வரலாற்றில் வீர நாயகர்களாக பொறிக்கப்படும். விடுதலைப் போரில் உயிர்த்தியாகம் செய்யும் ஒவ்வொரு வீரருக்கும் சுதந்திர இந்தியாவில் நினைவுச்சின்னம் எழுப்பப்படும். நாம் இந்தியாவை நோக்கி செல்லும் போது நானே தலைமை ஏற்று இந்த படையை நடத்துவேன். என்று வீரம் பொங்க பேசினார் நேதாஜி.
ஜெர்மனி அவரது படைக்காக தனியாக ஒரு பெரிய கட்டடத்தை வழங்கியிருந்தார் ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர். நேதாஜியின் படை பிரான்ஸ் படையெடுப்பின்போது ஹிட்லருக்கு உதவியாக செயல்பட்டது. அதே சமயம் ஜெர்மனி ரஷ்யா மீது ரஷ்ய படை எடுத்துச் செல்லும்போது தனது படையை எதிர்பார்க்கக் கூடாது என்று முன்பே சொல்லிவிட்டார். அத்தனை தீர்க்கதரிசனம் நேதாஜிக்கு.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE