சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கோழியில்லாமலே கிடைக்கும் முட்டை..!

Added : ஜன 13, 2022 | கருத்துகள் (2)
Share
Advertisement
முட்டையின் வெள்ளைக்கருவிலுள்ள புரதம் நமக்கு ஊட்டம் தரக்கூடியது. இதனால்தான் பலரும் 'ஓவால்புமின்' என்ற புரதத்திற்காக முட்டையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்கின்றனர்.ஆனால், ஓவால்புமினுக்காக, ஏராளமான கோழிகளை, பண்ணைகளில் வளர்க்கவேண்டிஉள்ளது. முட்டை, முக்கால்வாசி இறைச்சி போக, மீதி எல்லாம் சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் கழிவுகளாக்கப்படுகின்றன.இந்த அவலத்தைப் போக்க,
 கோழியில்லாமலே கிடைக்கும்  முட்டை..!


முட்டையின் வெள்ளைக்கருவிலுள்ள புரதம் நமக்கு ஊட்டம் தரக்கூடியது. இதனால்தான் பலரும் 'ஓவால்புமின்' என்ற புரதத்திற்காக முட்டையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்கின்றனர்.

ஆனால், ஓவால்புமினுக்காக, ஏராளமான கோழிகளை, பண்ணைகளில் வளர்க்கவேண்டிஉள்ளது. முட்டை, முக்கால்வாசி இறைச்சி போக, மீதி எல்லாம் சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் கழிவுகளாக்கப்படுகின்றன.
இந்த அவலத்தைப் போக்க, தாவரங்கள் மூலமாகவே முட்டையில் உள்ள புரதத்தை வளர்த்து எடுக்க சில விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

அண்மையில் ஹெல்சிங்கி பல்கலை மற்றும் பின்லாந்தின் வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பூஞ்சையிலிருந்து ஓவால்புமின் புரதத்தை தயாரித்துள்ளனர். கோழியில் ஓவால்புமினை உற்பத்தி செய்ய உதவும் மரபணுவை எடுத்து, 'டிரைகோடெர்மாரீசி' என்ற பூஞ்சையில் புகுத்தி, விஞ்ஞானிகள் இதை சாதித்துள்ளனர்.

இதையடுத்து அந்த பூஞ்சை சுரந்த ஓவால்புமின் புரதத்தை சேகரித்து, ஒரு பொடியாகத் தயாரித்தனர்.இந்தப் பொடியை சோதித்ததில், கோழி முட்டையின் வெள்ளைக் கரு பொடியைப் போலவே பல அம்சங்களைக் கொண்டிருந்தது.

பூஞ்சைப் பொடியை முட்டைப் பொடியைப் போலவே, தண்ணீர் கலந்து அடித்து கிரீம் போலத் தயாரிக்க முடிந்தது.பூஞ்சையில் விளையும் ஓவால்புமின் புரதத்தை இந்த உலகம் உணவாக ஏற்றுக்கொண்டால் என்னவாகும்?

கோழிப்பண்ணை மற்றும் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 90 சதவீதம் மிச்சமாகும். பண்ணைத் தொழில்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களில் 3,0-55 சதவீதம் தடுக்கப்படும். மொத்தத்தில் பூஞ்சைப் புரதம் பூமியை மாசு குறைந்ததாக ஆக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
13-ஜன-202219:22:52 IST Report Abuse
Indhiyan இதே முறையில் தான் இன்சுலின் தயாரிக்கிறார்கள். மனிதனின் இன்சுலின் சுரக்கும் மரபணுவை பூஞ்சையில் புகுத்தி பூஞ்சை இன்சுலின் சுரக்கிறது. கோடிக்கணக்கான மனிதர்கள் பல்லாண்டு காலமாக பின்விளைவு இன்றி பயன்படுத்துகிறார்கள். அதை போலவே ஓவால்புமின் பூஞ்சை மூலமாக தயாரிக்கலாம். இறைச்சி முழுவதையும் இதை போலவே தயாரிக்கலாம். வேண்டியது கிடைக்கும் உயிர் கொலை தடுக்கலாம். இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோடிக்கணக்கான விலங்குகளினால் ஏற்படும் CO2 ஐ குறைக்கலாம்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
13-ஜன-202217:56:19 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இதை உண்பதால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி இப்போது நாம் அறியமாட்டோம் அதைவிட முக்கியம் இதை ஜீரணிக்க நம்மிடம் உள்ள என்சைம்கள் போதுமா ? சரியானவையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X