உணவைக் காக்கும் 'ஸ்மார்ட் பாக்கெட்'
பொட்டலங்களில் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் ஒரு சிக்கல் உண்டு. அடைக்கப்பட்ட உணவுவின் மேல் பலவகை பூஞ்சைகள் பூத்துக் கெட்டுப் போகலாம். அல்லது ஈ.கோலி போன்ற கேடு விளைவிக்கும் பேக்ட்ரியா வந்து அண்டிவிடலாம்.
இதை தடுக்க, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், 'ஸ்மார்ட் பேக்கேஜிங்' முறையை உருவாக்கியுள்ளனர்.
இந்த முறையில், பொட்டலத்தின் உட்பரப்பிலிருந்து, நாள்படஇயற்கையான வேதிப் பொருட்கள் மெல்லக் கசியும். இவை கிருமிகளையும் பூஞ்சைகளையும் கொல்லும் திறன் கொண்டவை. எனவே, ஸ்மார்ட் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் வெகுநாட்களுக்கு பாதுகாப்போடு இருக்கும்.
விரல் காட்டும் அழுத்தம்
ரத்த அழுத்தமானியை பார்த்ததுமே நோயாளிக்கு ரத்த அழுத்தம் சற்றே உயரும், அக்கருவி மூலம் அளக்க சில நிமிடங்கள் ஆகும். இதற்கு மாற்றாக, ஐந்தே நொடிகளில், நோயாளியின் ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல, இதயத்துடிப்பு வேகம், ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு, உடல் வெப்பம் மற்றும் மூச்சு விடும் வேகம் என்று அனைத்தையும் சேகரித்துச் சொல்லும் ஒரு கருவியை அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆக்சிமீட்டரைப் போலவே, இதையும் விரலில் மாட்டவேண்டும். அதிலுள்ள உணரிகள் ஒளியை விரல் தோல் மீது செலுத்த, பிரதிபலிக்கும் ஒளியை வைத்து, ரத்தக்குழாயில் ரத்தம் பயணிக்கும் வேகத்தை கணக்கிடுகிறது. பிறகு கணினியின் உதவியுடன் நோயாளியின் ரத்த அழுத்தத்தையும் பிற தகவல்களையும் கணக்கிடுகிறது. சோதனையில் லுள்ள இக்கருவி 90 சதவீத துல்லியத்துடன் ரத்த அழுத்தத்தை கணிக்கிறது.
புதிய நோய்களுக்கு புதிய தடுப்பூசி நுட்பம்
மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பணுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பு மருந்துகள் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில் பெரும்பங்காற்றின. தற்பொழுது, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேறு பல தொற்று நோய்களை முறியடிக்கும் தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சிகள் உலகெங்கும் வேகமெடுத்துள்ளன.
உலகில் மூவரில் ஒருவரைத் தொற்றி, தோல் நோயை உண்டாக்கக்கூடியது ஹெர்பஸ் ஜோஸ்டர் வைரஸ். இதற்கு எதிரான எம்.ஆர்.என்.ஏ தடுப்பு மருந்தை உருவாக்க, பைசர் மருந்து நிறுவனம் ஆராய்ச்சியை முடுக்கியுள்ளது. பதின்ம வயதினரை அதிகம் தாக்கும் எப்ஸ்டீன்-பார் வைரசுக்கு மாடெர்னா மருந்து நிறுவனம் தடுப்பூசியை உருவாக்க தீவிரம் காட்டிவருகிறது.
இதேபோல குழந்தைகளைத் தாக்கும் புதிய தொற்றுநோய்கள், ஏன் எய்ட்சுக்குக்கூட எம்.ஆர்.என்.ஏ ரக தடுப்பூசிகளை உருவாக்கிட ஆய்வுகள் நடந்துவருகின்றன.
போன பிறகும் தொடரும் விளைவுகள்
கோவிட்-19 தாக்குதல் வந்து குணமாகி வீடு திரும்புவோரில், சிலருக்கு 'லாங் கோவிட்' என்ற பாதிப்பு தொடர்வதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நினைவாற்றல் குறைதல் முதல் குறிப்பிட்ட சில உறுப்புக்களில் பாதிப்பு வரை, பின்விளைவுகள் தொடர்வதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது, அமெரிக்காவிலுள்ள செடார்-சினாய் மருத்துவமனையின் ஆய்வாளர்கள், லாங் கோவிட் பாதிப்பு, ஒமிக்ரான் தாக்கியவர்களுக்கும் தொடரக்கூடும் என்று கருதுகின்றனர்.
நல்லவேளையாக பழைய கொரோனாவைவிட, ஒமிக்ரான் தொற்றியோர் குறைந்த நாட்களிலேயே குணடைகின்றனர். எனவே, ஒமிக்ரான் மிதமான ஒரு தொற்றுதான். இருந்தாலும், இத்தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும்கூட லாங் கோவிட் பாதிப்புகள் இருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டதும் உடலின் நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகப்பட்சமாக உடலில் உற்பத்த்தியாகின்றன. இந்த அணுக்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களை தவறாக தாக்குகின்றன. இதனால் நரம்பு மண்டலம் முதல் சில உடலுறுப்புகள் வரை பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று செடார்-சினாய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement