புதுச்சேரியில் கவர்னர் ஆட்சி நடக்கிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாய்ச்சல்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுச்சேரி: 'புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பதில், கவர்னர் ஆட்சி நடக்கிறது' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.புதுச்சேரி அரசில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, தொழில் காங்., அமைப்பு சார்பில் வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பு, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: 'புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பதில், கவர்னர் ஆட்சி நடக்கிறது' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி அரசில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, தொழில் காங்., அமைப்பு சார்பில் வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பு, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:



latest tamil news



புதுச்சேரியில் படித்த பட்டதாரிகள் 24 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் படித்து வெளியே வரும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. கான்ஸ்டபிள் பணிக்கு, எம்.ஏ., படித்தவர் விண்ணப்பிக்கும் நிலையை என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு உருவாக்கி உள்ளது. கிரண்பேடியால் தடுத்து நிறுத்தப்பட்ட கான்ஸ்டபிள் பணிக்கு, தற்போது அழைப்பு கடிதம் அனுப்புகின்றனர். காங்., ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட காமராஜர் மணி மண்டபத்தை இப்போது திறக்கின்றனர்.

நாங்கள் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஒப்புதல் வாங்கி வைத்ததை, தற்போது என்.ஆர்.காங்., கொடுக்கிறது.அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்து விட்டு ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார். தற்போது நடப்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசா, ஜனாதிபதி அரசா என கேள்வி எழுந்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்தால், சிகிச்சை அளிக்க போதிய கட்டமைப்புகளை அரசு உருவாக்கவில்லை. மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கும் வேலையை அரசு செய்கிறது.


latest tamil news



புதுச்சேரிக்கு பொறுப்பு கவர்னர். அவர் தெலுங்கானாவுக்கு செல்வதில்லை. புதுச்சேரியில் அதிகாரம் செலுத்த இங்கேயே தங்கி விட்டார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிடையாது. கவர்னர் அரசு நடக்கிறது. கொரோனா பரவும் நேரத்தில் பா.ஜ.,வினர் கபடி விளையாடுகின்றனர். வெட்கக் கேடான ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஜன-202222:35:48 IST Report Abuse
DARMHAR நாராயணசாமி அண்ணாத்தே நீ கரடியாக கத்தினாலும் இனிமேல் உன்னை யாரும் சட்டை செய்யப்போவதில்லை. கம்முன்னு வாயை மூடிக்கினு இருக்கிறதே உனக்கு நல்லது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஜன-202221:25:46 IST Report Abuse
Natarajan Ramanathan கவர்னர் ஆட்சியோ அல்லது ரங்கசாமி ஆட்சியோ.......எதுவாக இருந்தாலும் கேவலமான ஆட்சியை விட மிகவும் நன்றாகவே இருக்கிறது.
Rate this:
Cancel
13-ஜன-202219:05:19 IST Report Abuse
பேசும் தமிழன் போன முறை தேர்தலில் போட்டி போடாமல்... நமச்சிவாயம் அவர்கள் வெற்றி பெற்ற உடன்.... இத்தாலி குடும்பத்துக்கு செருப்பு தூக்கின காரணத்துக்காக.. முதல்வர் ஆன ஆள் தானே நீங்கள்.... நோகாமல் நுங்கு தின்றது போல் இனி செய்ய முடியாது.... மக்களும் இத்தாலி கான் கிராஸ் க்கு ஓட்டு போட தயாராக இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X