பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் மலை மலையாய் குப்பை ஊழல்: நடவடிக்கை எடுக்காமல் அரசு மவுனம்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், குப்பை மேலாண்மையில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருப்பது, தணிக்கைத்துறை ஆய்வில் தெரியவந்தும், அரசு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கின்றனர்.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகும். விசேஷ நாட்களில், 1,000 முதல், 1,200 டன் வரை குப்பை உருவாவதாக கணக்குச் சொல்லப்படுகிறது. தரம் பிரித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவை மாநகராட்சியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், குப்பை மேலாண்மையில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருப்பது, தணிக்கைத்துறை ஆய்வில் தெரியவந்தும், அரசு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகும். விசேஷ நாட்களில், 1,000 முதல், 1,200 டன் வரை குப்பை உருவாவதாக கணக்குச் சொல்லப்படுகிறது. தரம் பிரித்து சேகரிக்காமல், மொத்தமாக வெள்ளலுாரில் கொட்டப்படுகிறது. அதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.



latest tamil news



இதை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் உறுதியளித்தபடி, குப்பையை கையாள மாநகராட்சியும் அக்கறையோடு செயல்படாமல் உள்ளது.இச்சூழலில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், குப்பையை வெள்ளலுார் கிடங்கிற்கு எடுத்துச் செல்ல, தனியார் வாகனங்களை ஒப்பந்தம் செய்து, ரூ.43.24 கோடியை தேவையின்றி செலவு செய்தது; குப்பை தொட்டி வாங்குவதற்கு ரூ.5.29 கோடி செலவழித்தது தொடர்பான, 13 கோப்புகளை காணவில்லை என, தணிக்கைத்துறை ஆய்வில், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதிகாரிகள் திணறல்

சமீபத்தில், சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், இது குறித்து பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது. அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொடர்பாக, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

தற்போது, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர், வெள்ளலுார் கிடங்கை கள ஆய்வு செய்தனர். பழைய குப்பையை விஞ்ஞான பூர்வமாக அழிப்பதாக கூறும், 'பயோமைனிங்' முறையை பற்றி கேட்டறிந்தனர். கிடங்கு முழுவதும் மலைக்குன்று போல் குப்பை குவியல்கள் காணப்பட்டன; 15 கி.மீ., சுற்றளவுக்கு குப்பை துர்நாற்றம் வீசியது.


latest tamil news



அதிருப்தியடைந்த செயலர் ஷிவ்தாஸ் மீனா, ''முதல்கட்டமாக, மையத்தை சுற்றியுள்ள குப்பை மலையை அகற்றி, நிலத்தை மீட்டெடுங்கள். துர்நாற்றம் வீசுவதை தடுக்க, மரக்கன்றுகள் நடுங்கள்,'' என அறிவுறுத்தினார்.

'பயோ மைனிங்' திட்டத்துக்கு, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2020, ஜூன் மாதம் 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டது; 24 மாதத்துக்குள் பழைய குப்பையை அழிக்க அறிவுறுத்தப்பட்டது. 20 மாதங்களாகி விட்டது; இதுவரை, 14 சதவீத பணிகளே நடந்துள்ளன. இம்மையத்தில், மூன்று இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது.

குப்பை ஊழல் நடந்திருப்பது தணிக்கைத்துறை அறிக்கை, சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு மூலம் வெளிச்சத்துக்கு வந்தும், இத்துறையை சேர்ந்தவர்கள் மீது துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தமிழக அரசின் உயரதிகாரிகள் மவுனம் சாதித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202206:40:29 IST Report Abuse
அப்புசாமி நாட்டுல நூத்துக்கு ஒண்ணு ரெண்டு பேர் திருடுனா போலீஸ் பிடிக்கும். தண்டனை குடுக்கலாம் இங்கே நூத்துக்கு 98 பேர் திருடங்க. யாரைப் பிடிக்கிறது? யாரை தண்டிக்கிறது? இந்தியா முழுக்க இதே நிலைமைதான்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஜன-202221:19:32 IST Report Abuse
r.sundaram ஏற்பட்ட இழப்பை சரியாக கணித்து, சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும். எந்தெந்த கோப்புகளை காண வில்லையோ அதற்க்கு பொறுப்பானவர்களிடம் துறைரீதிக்காக நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும். கோப்புகளையே பாதுகாக்க தெரியாதவர்கள் வேறு என்ன செய்ய போகிறார்கள்?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-202215:28:24 IST Report Abuse
Bhaskaran Arasiyalviyaathikaum thunaipona athigaarikalum kudumbathudan meelaanaragathukuthaan poganum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X