பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார்?; மக்களிடம் கருத்து கேட்கும் கெஜ்ரிவால்

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சண்டிகர்: ஆம்ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பஞ்சாப் மக்கள் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை பொறுத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.பஞ்சாபில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில்
Punjab Election 2022, AAP, CM Candidate, Arvind Kejriwal, Releases, Toll Free, Seek Voters, Choice, CM Face, Punjab State

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: ஆம்ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பஞ்சாப் மக்கள் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை பொறுத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பஞ்சாபில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ், பா.ஜ., ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து இன்று (ஜன.,13) அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகவந்த் மான் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அன்பானவர். அவர் என் இளைய சகோதரர் போன்றவர்.

ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? மக்களிடம் கருத்து கேட்பு


latest tamil newsபஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு அவரை முதல்வராக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு, இதை பஞ்சாப் மக்கள் முடிவு செய்யட்டும் எனக் கூறினார். எனவே, ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வர் யார் என்பதை மக்களே இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். ஆம்ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் முகத்தை பஞ்சாப் மக்கள் தேர்வு செய்ய 7074870748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் ஜன.,17ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202218:45:57 IST Report Abuse
பேசும் தமிழன் உங்கள் பெயரை தான் சொல்கிறார்கள்... ஆதலால் நீங்கள் டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு... பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டு... பஞ்சாப் மக்களை காப்பாற்ற வேண்டும்..... இது எப்படி இருக்கு???
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-ஜன-202216:03:38 IST Report Abuse
DVRR எல்லோரும் கெஜரிவால் பெயரையே சொல்வதால் கெஜரிவால் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இந்தியன் Constitution ஐ மாற்றவேண்டும் அதில் ஒருவர் இரு மாநிலத்திற்கு முதன் மந்திரியாக இருப்பதற்கு . அப்படி மோடி செய்யவில்லையென்றால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
13-ஜன-202213:22:45 IST Report Abuse
Balaji பக்கா அரசியல் வியாதி.. கிளீனர் விஞ்ஞானி பிட்சை எடுக்கவேண்டும் இவரிடம்... நீ ஜமாய் ராசா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X