பொது செய்தி

தமிழ்நாடு

உண்மை நிலையை வெளிப்படுத்திய 'தினமலர்': ஜவுளித்துறை அமோக வரவேற்பு!

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (12)
Share
Advertisement
பஞ்சு விலை உயர்வுக்கான காரணிகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் 'தினமலர்' நாளிதழில் வெளியான கட்டுரைக்கு, ஜவுளித்துறை மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென்று தொழில் அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக, வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. இதனால் பஞ்சை முக்கிய மூலப் பொருளாகக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஞ்சு விலை உயர்வுக்கான காரணிகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் 'தினமலர்' நாளிதழில் வெளியான கட்டுரைக்கு, ஜவுளித்துறை மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென்று தொழில் அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. இதனால் பஞ்சை முக்கிய மூலப் பொருளாகக் கொண்டுள்ள ஜவுளித்துறை, பெரும் கலக்கமடைந்துள்ளது. ஜவுளி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கும் தமிழகமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பருத்தி மீதான இறக்குமதி வரியும், யூக வணிகமுமே காரணமென்று தெரியவந்துள்ளது.


latest tamil news
இதுகுறித்து நமது நாளிதழில், 'பறக்குது பஞ்சு விலை... பதறுது ஜவுளித்துறை' என்ற தலைப்பில், ஜன.,11ல் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. இதற்கு ஜவுளித்துறை சார்ந்த தொழில் அமைப்பினரிடமும், நுாற்பாலை உரிமையாளர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா): திருப்பூர் பின்னலாடை துறைக்கு ஒரு பிரச்னை என்றால், உடனடியாக விரிவாகவும், தெளிவாகவும் செய்தி வெளியிட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று 'தினமலர்' தீர்வு ஏற்படுத்தி தருகிறது. கடந்த காலங்களில், பஞ்சு, நுால், சாய ஆலை மூடல், மின்வெட்டு என ஏராளமான சோதனைகளை பின்னலாடை துறை சந்தித்துள்ளது.

'தினமலர்' நாளிதழ் பக்கபலமாக இருப்பதாலேயே, தொழில் துறையினர், சோதனைகளை சாதனையாக மாற்ற முடிந்திருக்கிறது. தற்போது, பஞ்சு, நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயர்வுக்கு, யூக வணிகம்தான் காரணம் என்பதை துணிச்சலாகவும், பளிச்சென்றும் சொன்னது 'தினமலர்' மட்டுமே. பொதுமக்கள், தொழில்முனைவோர் பிரச்னைகளை வெளிக்கொணர்ந்து, தீர்வு காண்பது; நகர வளர்ச்சி என, 'தினமலரின்' விசாலமான பார்வை பாராட்டத்தக்கது.


latest tamil newsகுமார் துரைசாமி, நிர்வாக இயக்குனர், ஈஸ்டர்ன் குளோபல் கிளாத்திங்: திருப்பூர் பின்னலாடை துறையுடன் 'தினமலர்' நாளிதழ் இரண்டற கலந்துவிட்டது. ஜவுளித்துறையின் பிரச்னைகளை, நுனிப்புல் மேய்ந்ததுபோல் மேலோட்டமாக சொல்லாமல், ஆழமாகச் சென்று, நன்கு ஆராய்ந்து வெளியிடுவது 'தினமலர்' மட்டுமே. பஞ்சு, நுால் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கும்வகையில் கடந்த 11ம் தேதி வெளியான ஒருபக்க கட்டுரை, சிறந்த சான்று.

சக்திவேல், நிர்வாக இயக்குனர், டெபோடில் நிட்வேர்: எந்த ஒரு பிரச்னையையும் பெரிதுபடுத்தி, மக்களை பயமுறுத்தாமல், உள்ளது உள்ளபடி செய்தி வெளியிடுவதில், 'தினமலர்' நாளிதழ் முன்னோடியாக உள்ளது. திருப்பூரின் உயிர் மூச்சாக உள்ள பின்னலாடை துறை வளர்ச்சியில், 'தினமலர்' பங்களிப்பு அபரிமிதமானது. தொழில் சார்ந்த ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ளமுடிகிறது.

ஸ்ரீகாந்த், தலைவர், திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா): 'தினமலர்' நாளிதழில் ஒரு செய்தி வெளியானால், அந்த செய்தி நுாறு சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கும். அதனால் தான், 'தினமலர்' வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.latest tamil newsதிருப்பூரில், பின்னலாடை தொழில் நிலை, தொழில் நுட்ப மேம்பாடு, பிரச்னைகளை எல்லாம், எளிய முறையில், சாதாரண தொழிலாளர்களும் புரிந்துகொள்ளும்வகையில் செய்தி வெளியிடுவது பாராட்டத்தக்கது. பஞ்சு, நுால் குறித்து எனக்கு தெரியாத பல தகவல்கள் செய்தியில் பொதிந்திருப்பது, வியப்பை ஏற்படுத்தியது. 'தினமலர்' தரும் ஆதரவும் ஆலோசனையும், உலக அரங்கில், திருப்பூர் பின்னலாடை துறையை மென்மேலும் மிளிரச்செய்யும்.


'உள்ளது உள்ளபடி...'

இந்திய ஜவுளித்துறை கூட்டமைப்பை (ஐ.டி.எப்.,) சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட அங்கத்தினர்களும், நுாற்பாலை உரிமையாளர்களும், இந்தக் கட்டுரை குறித்து தங்களுடைய பாராட்டுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், ''கடந்த 11ம் தேதி 'தினமலர்' வெளியிட்ட கட்டுரை, எந்த மிகைப்படுத்தலும் இன்றி, உண்மை நிலையை உள்ளதுஉள்ளபடி பதிவு செய்திருந்தது. அனைத்துத் தரப்பு கருத்தும் அதில் இடம் பெற்றிருந்தது. இதுபோன்று, 'தினமலர்' சிறப்புக் கட்டுரை வெளியிடும்போதெல்லாம் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தீர்வும் கிடைத்துள்ளது. இப்போதும் இந்த பிரச்னைக்கு மத்திய அரசு நடவடிக்கையால் விரைவில் தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்,'' என்றார்.

-நமது நிருபர் குழு-

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil kumar - coimbatore,இந்தியா
13-ஜன-202221:16:55 IST Report Abuse
Senthil kumar 'பறக்குது பஞ்சு விலை... பதறுது ஜவுளித்துறை' - கட்டுரையில் ஜவுளித்துறையில் உள்ள பிரச்சனைகளை விரிவாக விளக்கியமைக்கு நன்றி. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களை கொண்டது ஜவுளித்துறையாகும். இத்துறையை காப்பாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
13-ஜன-202219:02:22 IST Report Abuse
S Bala பொதுவாகவே யூகவணிகம் என்பது மக்களுக்கோ தொழில்களுக்கோ எந்தவிதத்திலும் உகந்ததல்ல. மேலும் பங்குசந்தையை ஒரு சூதாட்ட களமாக மாற்றியதில் இது பெரும்பங்கு வகிக்கிறது.
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
13-ஜன-202218:24:25 IST Report Abuse
Trichy Mahadevan மிகவும் வரவேற்கத்தக்கது. எங்கள் உளமார்ந்த நன்றி. அதே போல் தங்கம் பற்றியும் ரியல் எஸ்டேட் விற்பனை பற்றியும் விரிவாக மக்களுக்கு பயன்படுமாறு எழுதவும். மக்கள் உண்மையின் உரைகல்(தினமலரை) வாழ்த்தி வாங்குவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X