உத்தரபிரதேசத்தில் 3வது அமைச்சர் ராஜினாமா; சமாஜ்வாதி கட்சியில் சேர்கிறார்

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (68) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் வரிசையாக ராஜினாமா செய்துவருவதால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது 3வது அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்ததுடன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷை சந்தித்துள்ளதால், அவர் சமாஜ்வாதியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7
UP, Assembly Elections 2022,BJP, Loses, Third Minister, Dharam Singh Saini, Resigns, Joins, Samajwadi Party

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் வரிசையாக ராஜினாமா செய்துவருவதால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது 3வது அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்ததுடன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷை சந்தித்துள்ளதால், அவர் சமாஜ்வாதியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கிடையே ஆளும் பா.ஜ.,வில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் மற்றும் 5 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.


மேலும் ஒரு அமைச்சர் 2 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு 'குட்பை' | உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு | UP BJP MLA Resign | Dinamalar |

latest tamil newsஇந்நிலையில் தற்போது பா.ஜ., அமைச்சர் தரம் சிங் சைனி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு), அமைச்சராக இருந்தார். தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பா.ஜ., புறக்கணித்து வருவதால் தாம் பதவி விலகுவதாக தரம் சிங் சைனி தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தொடர்ந்து ராஜினாமா செய்யும் காட்சிகள் அரங்கேறுவதால் பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-202205:51:24 IST Report Abuse
Kasimani Baskaran தமிழகத்தைக்கூட தாண்ட முடியாத திராவிடாள்ஸ் குதிப்பதைப் பார்த்தால் பருந்தாக ஆசை போல இருக்கிறது. ஊர்க்குருவி கூட இல்லை என்பதை விரைவில் அறிவார்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஜன-202219:04:07 IST Report Abuse
A.George Alphonse எத்தனை நாளைக்குத்தான் இந்த ஸ்ரீராம் ஜென்ம பூமி ஸ்லோகம் வேலைசெய்யும்.
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
14-ஜன-202202:40:45 IST Report Abuse
Venkateshகிறிஸ்து சிலுவை வேலை செய்யும் போது , உலகை இயக்கும் ஸ்ரீராம ஸ்லோகம் வேலை செய்யும்....
Rate this:
Ganesh - Chennai,இந்தியா
16-ஜன-202203:49:33 IST Report Abuse
Ganeshமுரட்டு சங்கியா இருப போல...
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
13-ஜன-202218:55:33 IST Report Abuse
Samathuvan யோகி ஜி நீங்க இந்த முறை ஜெயிச்சாலும், தோற்றாலும் நீங்கள் முதல்வர் ஆகப்போவது இல்லை, இது ஏற்கெனவே அந்த ஜீ க்களால் முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே,இப்பொழுதும் யாரும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் ஆகலாம் பின்பு பார்ட் டைமாக பகுத்தறிவும் கற்றுக்கொள்ளலாம். முடிவு பண்ணிக்கங்க.
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
14-ஜன-202202:44:39 IST Report Abuse
Venkateshயாரும் தமிழ் நாட்டில் அர்ச்சகர் ஆகலாம், அனால் யாரும் முல்லாவோ அல்லது பாதிரியாரோ ஆக முடியாது,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X