தமிழகம் எதிர்க்கும் திட்டத்தை ஆதரித்து கர்நாடக காங்., யாத்திரை: ஒமைக்ரானால் கைவிட்டனர்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (9)
Share
Advertisement
பெங்களூரு: தமிழக அரசு எதிர்க்கும் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என கடந்த ஐந்து நாட்களாக ஒமைக்ரான் பரவலையும் பொருட்படுத்தாமல் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை சென்றனர். உயர்நீதிமன்ற எதிர்ப்பால் யாத்திரையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காவிரியின் குறுக்கே
Congress, Padyatra, Karnataka, Paused, Mekedatu, காங்கிரஸ், பேரணி, ஒத்திவைப்பு, கர்நாடகா, மேகதாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: தமிழக அரசு எதிர்க்கும் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என கடந்த ஐந்து நாட்களாக ஒமைக்ரான் பரவலையும் பொருட்படுத்தாமல் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை சென்றனர். உயர்நீதிமன்ற எதிர்ப்பால் யாத்திரையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது. எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் பா.ஜ., அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக மேகதாது அணை திட்டத்தை உடனே செயல்படுத்தக் கோரி கடந்த வாரம் பாத யாத்திரை கிளம்பியது. இதில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். யாத்திரையை தொடங்கி வைத்த வீரப்ப மொய்லி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இருப்பினும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பேரணியை நடத்தி வந்தனர். கோவிட் விதிகளை பின்பற்றாமல் காங்கிரஸ் நடத்திய யாத்திரையின் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், காங்கிரஸ் பாதயாத்திரையை அனுமதித்தது ஏன்? அதனை தடுக்காமல் விட்டது ஏன்? என அரசுக்கு கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, பாத யாத்திரையை கைவிடும் படி காங்கிரஸ் தலைவர் சித்தாராமையாவிடம் வலியுறுத்தினார். காங்கிரஸ் எம்.பி., ராகுலிடமும் இவ்விஷயம் சென்றுள்ளது. அவரும் யாத்திரையை கைவிடக் கோரியுள்ளார். அதனால் தற்போது தமிழக எதிர்க்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் யாத்திரையை ஒத்தி வைத்துள்ளனர். நிலைமை சீரடைந்ததும் விட்ட இடத்திலிருந்து யாத்திரை தொடரும் என காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202206:36:01 IST Report Abuse
அப்புசாமி எல்லோருமே பாஷண்டிகள். இங்கே ஒரு மாதிரி பேசுவாங்க. அங்கே வேற மாதிரி பேசுவாங்க.
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை இதில் எல்லா தேசிய கட்சிகள் ஒரே மாதிரி தான். மாநிலத்திற்கு மாநிலம் நிலைப்பாடு வேறு.
Rate this:
Cancel
13-ஜன-202219:07:53 IST Report Abuse
பேசும் தமிழன் தமிழகத்தில் கான் கிராஸ் என்ற ஒரு கட்சி இருக்கா???? அவர்கள் உப்பு போட்டு சாப்பிடுகிறார்கள்.... ஆனால் நீங்கள்???.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X