வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரயாக்ராஜ்: உ.பி.,யில் 45 நாள் மகர சங்கராந்தி விழாவுக்கு யோகி அரசு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை உண்டாகியது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் சங்கம். இந்த இடத்தில் 45 நாட்கள் நடக்கும் மகர சங்கராந்தி விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். நாளை (ஜன.,14) முதல் இந்த விழா துவங்குகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் இந்த இடத்தில் ஒன்று கூடுவர். தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சங்கம் பகுதியில் மக்கள் ஒன்று கூட யோகி ஆதித்யநாத் அரசு அனுமதி அளித்துள்ளது, தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.

வரும் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் நல்லாதரவைப் பெறவே யோகி அரசு மகர சங்கராந்தி விழா நடத்த அனுமதி வழங்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல லட்சம் பேர் ஒரே இடத்தில் ஒன்றுகூடும்போது ஒமைக்ரான் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஒமைக்ரான் தாக்கம் காரணமாக உத்தரபிரதேசத்தில் அரசியல் பேரணிகள் நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ள நிலையில் வரும் 45 நாட்களுக்கு சங்கம் பகுதியில் உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை தீவிர விழிப்புடன் செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக யோகி அரசு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE