பொது செய்தி

இந்தியா

23 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தங்க நகைகள்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் 23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டரூ. 8 கோடி மதிப்பிலான தங்க நகைகள்,அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது.இதன் நிறுவனரான அர்ஜன் தஸ்வானி வீட்டில் 1998ல் திருடர்கள் சிலர் நுழைந்தனர். தஸ்வானி மற்றும் அவரது மனைவியை கட்டி வைத்துவிட்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக்
Mumbai, stolen gold

மும்பை: மஹாராஷ்டிராவில் 23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டரூ. 8 கோடி மதிப்பிலான தங்க நகைகள்,அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல ஜவுளிக்கடை உள்ளது.இதன் நிறுவனரான அர்ஜன் தஸ்வானி வீட்டில் 1998ல் திருடர்கள் சிலர் நுழைந்தனர். தஸ்வானி மற்றும் அவரது மனைவியை கட்டி வைத்துவிட்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை திருடிச் சென்றனர். அதே ஆண்டு இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன.

எனினும் அந்த நகைகள் உரிமையாளரிடம் அப்போது ஒப்படைக்கப்படவில்லை. இதற்கிடையே 2007ல் அர்ஜன் தஸ்வானி காலமானார்.இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அர்ஜன் தஸ்வானிக்கு பதில், அவரது மகன் ராஜு தஸ்வானி இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோரே, மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளை ராஜுவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதற்கான ரசீதுகளை ஆதாரமாக காண்பித்து ராஜு அவற்றை பெற்றார்.23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அந்த நகைகளின் தற்போதையை மதிப்பு 8 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
17-ஜன-202214:39:42 IST Report Abuse
THINAKAREN KARAMANI 23 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தச் செய்தி இந்திய நீதித்துறை மீது மிகவும் நன்மதிப்பை ஏற்படுத்திக்கிறது. நகைகளை 23 ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்த காவல்துறைக்குப் பாராட்டுக்கள்.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியில் வைக்கப் பட்ட ஜெயாவின் வைர நகைகள் என்ன ஆனதோ யார் அனுபவிக்கிறார்களோ யார் கண்டா...
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
15-ஜன-202216:07:28 IST Report Abuse
venkates வழக்கு வந்தால் உடனடியாக தீர்க்கவேண்டும் ,,, இது போன்று காலம் தாழ்த்துவது நீதி இல்லை, அநீதியே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202205:28:17 IST Report Abuse
J.V. Iyer எப்போதாவது இப்படித்தான் இந்தியாவில் நல்ல நீதி வழங்கப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X