இந்திய சொத்தை முடக்க பாரிஸ் கோர்ட் அனுமதி

Added : ஜன 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி:இழப்பீட்டு தொகையை வழங்காததை எதிர்த்து 'டேவாஸ் ஷேர்ஹோல்டர்ஸ்' என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்தியாவுக்கு சொந்தமாக பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை முடக்குவதற்கு ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'எஸ் - பேண்ட்' எனப்படும் அதிவேக அலைவரிசையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விற்பனை பிரிவான

புதுடில்லி:இழப்பீட்டு தொகையை வழங்காததை எதிர்த்து 'டேவாஸ் ஷேர்ஹோல்டர்ஸ்' என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்தியாவுக்கு சொந்தமாக பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை முடக்குவதற்கு ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'எஸ் - பேண்ட்' எனப்படும் அதிவேக அலைவரிசையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விற்பனை பிரிவான 'ஆன்டிரிக்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனம் 2005ல் ஏலம் விட்டது. இந்த அலைவரிசை கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 'டேவாஸ்' நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் மொரீஷியஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் முறைகேடு நடந்ததாக 2011ல் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து டேவாஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்திய அரசு 9,610 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுஇருந்தது. இந்தத் தொகையை செலுத்தாததால் இந்திய அரசுக்கு வெளிநாடுகளில் சொந்தமாக உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரி, டேவாஸ் நிறுவனம் சார்பில் பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அசை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம் பாரிஸ் நகரில் இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள 32 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை முடக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-ஜன-202208:48:41 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்தியாவின் வளத்தை தண்டத்திற்கு அழுவார்கள்.நேர்மைக்கு இங்கு ஏதும் இல்லை என்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X