தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - பிரிட்டன் பேச்சு

Added : ஜன 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி:இந்தியா -பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான அதிகார பூர்வமான பேச்சை இரு நாடுகளும் துவக்கி உள்ளன.ஐரோப்பிய நாடான பிரிட்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது. இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளதார உறவு மேம்படும் என

புதுடில்லி:இந்தியா -பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான அதிகார பூர்வமான பேச்சை இரு நாடுகளும் துவக்கி உள்ளன.
ஐரோப்பிய நாடான பிரிட்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது. இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளதார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச டில்லிக்கு பிரிட்டனின் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் அன்னேமேரி டிரெவிலியன் வந்துள்ளார்.
மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், டிரெவிலியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முறைப்படியான பேச்சை நேற்று துவக்கினார்.இது பற்றி பியுஷ் கோயல் கூறியதாவது: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் இந்தியாவும், பிரிட்டனும் ஆர்வமாக உள்ளன. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் பலன் அடையும்.
வர்த்தகம் தொடர்பான முதல் கட்ட பேச்சு 17ல் துவங்குகிறது. அதன்பின் ஒவ்வாரு ஐந்து வாரத்துக்குப் பின் அடுத்த கட்ட பேச்சுகள் நடக்கும்,இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
14-ஜன-202204:37:49 IST Report Abuse
.Dr.A.Joseph இந்தியாவுக்கு என்ன பலன் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும். ஏற்கனவே 1947 ஆகஸ்டு 15 வரை தடையில்லாமல் இந்தியாவில் இருந்துள்ளனர். 100 சதவிகிதம் இந்தியா பலன் பெற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X