பூடானில் புதிய கிராமங்கள்: சீன ராணுவம் அத்துமீறல்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி :நம் அண்டை நாடான பூடானுக்கு உட்பட்ட பகுதியில் 166க்கும் மேற்பட்ட கட்டடங்கள், சாலை வசதிகளுடன் கூடிய இரண்டு கிராமங்களை சீனா உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.சீனா - பூடான் இடையே 40 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுக்கு பின்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.இந்நிலையில் பூடான் - சீனா எல்லையில் பூடானுக்கு உட்பட்ட
 பூடான்,  கிராமங்கள், சீன ராணுவம், அத்துமீறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :நம் அண்டை நாடான பூடானுக்கு உட்பட்ட பகுதியில் 166க்கும் மேற்பட்ட கட்டடங்கள், சாலை வசதிகளுடன் கூடிய இரண்டு கிராமங்களை சீனா உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சீனா - பூடான் இடையே 40 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுக்கு பின்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.இந்நிலையில் பூடான் - சீனா எல்லையில் பூடானுக்கு உட்பட்ட பகுதியில், சீனா கிராமங்களை உருவாக்கி வருவதை புவி உளவு ஆய்வாளர் டாமியன் சைமன் என்பவர் செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக கடந்த நவம்பரில் உறுதி செய்தார்.latest tamil newsஇந்நிலையில் பூடானுக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதிகளுடன் கூடிய இரண்டு பெரிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது. கடந்த 2017ல் தோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயன்ற போது, அதை நம் படையினர் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.இந்த தோக்லாம் பகுதியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இந்த புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை டாமியன் சைமன் உறுதி செய்துள்ளார்.நரவானே பேச்சு: சீனா பாய்ச்சல்
நம் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே சமீபத்தில் அளித்த பேட்டியில், 'எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் எந்த வகையிலும் குறையவில்லை.எந்த சவாலையும் சந்திக்க நம் படைகள் தயாராக உள்ளன' எனக் குறிப்பிட்டார்.

இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் கூறியுள்ளதாவது: எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இருதரப்பு பேச்சு நடக்கிறது. இது போன்ற சூழ்நிலையில இந்திய தரப்பில் முக்கிய நபர்கள் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்துவர் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பேச்சில் முன்னேற்றம் இல்லைகிழக்கு லடாக்கின் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் அளவிலான 14வது சுற்று பேச்சு நடந்தது. இது குறித்து இரு தரப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:கிழக்கு லடாக்கின் மேற்கு பகுதியில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பது குறித்து இரு தரப்பும் வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டன. தலைமையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மீதமுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண ஒப்புக் கொள்ளப்பட்டது.

இது எல்லையில் அமைதியை மீட்டெடுப்பதற்கும், இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என, கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.இருதரப்பினரும் நெருங்கிய தொடர்பில் இருக்கவும், ராணுவ மற்றும் அதிகாரிகள் அளவிலான பேச்சை தொடரவும், மீதமுள்ள பிரச்னைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டன. அடுத்த கட்ட பேச்சை விரைவில் தொடர இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பேச்சில் இரு தரப்புக்கும் இடையே பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-ஜன-202211:58:46 IST Report Abuse
Barakat Ali இந்தியா உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லாமல் மவுனம் காப்பது அழகல்ல ஐ.நா. விடமாவது முறையிடலாம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-202206:25:38 IST Report Abuse
Mani . V இது அத்து மீறல் போன்று தோன்றவில்லை. நாம் விட்டுக் கொடுத்தது மாதிரிதான் தோன்றுகிறது. முன்பு அருணாசல பிரதேசம். இப்பொழுது பூடான். போகிற போக்கை பார்த்தால் 2040 குள் தமிழ்நாட்டுக்கே வந்து விட வாய்ப்புண்டு.
Rate this:
14-ஜன-202209:11:43 IST Report Abuse
ஆரூர் ரங்ஓ. பூட்டான் எப்போ இந்தியப் 🤔 பகுதியாக ஆனது? தனி நாடில்லையா?🙄 உங்க கருத்து முரசொலியிலிருந்து எடுக்கப்பட்டது போலுள்ளது...
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
15-ஜன-202215:05:44 IST Report Abuse
Neutral Umpireசிங்கப்பூர்ல காப்பி ஆத்தறதுக்கே நேரம் பத்தாதே ..எதுக்கு தேவையில்லாம குழப்பிக்கிறீங்க .....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-202205:47:51 IST Report Abuse
Kasimani Baskaran வாய்ப்பிருந்தால் ஜப்பானில் கூட கிராமம் அமைப்பார்கள். ஆனால் அடி பலமாக விழும் என்பதால் மறந்தும் ரஷ்யா பக்கம் போக மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X