சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

போனைத் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! சொல்கிறார்கள்

Added : ஜன 13, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன்: 'அடிக் ஷனை' மூன்று விதமாக பார்க்கலாம். காட்டு மனிதர்கள் பகலில் வேட்டையாடி முடித்து, இரவெல்லாம் நெருப்பைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பர். அப்படி இருப்பதில், அவர்களுக்கு சந்தோஷம். அது தான் அவர்களின் 'அடிக் ஷன்!'மனிதன், விவசாய சமூகமானபோது, நொதிக்க வைத்தலைத் தெரிந்து கொண்டான்; அப்போது மதுப் பழக்கம் உருவானது.
சொல்கிறார்கள்

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன்: 'அடிக் ஷனை' மூன்று விதமாக பார்க்கலாம். காட்டு மனிதர்கள் பகலில் வேட்டையாடி முடித்து, இரவெல்லாம் நெருப்பைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பர். அப்படி இருப்பதில், அவர்களுக்கு சந்தோஷம். அது தான் அவர்களின் 'அடிக் ஷன்!'மனிதன், விவசாய சமூகமானபோது, நொதிக்க வைத்தலைத் தெரிந்து கொண்டான்; அப்போது மதுப் பழக்கம் உருவானது. வேலை செய்த சமூகம், போதைப் பழக்கத்துக்கு 'அடிக் ஷன்' ஆனது.இன்றைய சமூகம், மொபைல் போனுக்கு அடிமையாக இருக்கிறது.உறவினர், நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கான சாதனம், தற்போது, அடிமைப்படுத்தும் சாதனமாக மாறி, வாழ்க்கையையே பறிக்கும் சாதனமாக உருவெடுத்திருக்கிறது.'கம்ப்யூட்டர் கேமிங்' பழக்கம், குழந்தைகளிடையே நடத்தை மாறுபாடு, முரட்டுத்தனமான சுபாவம், அடிமையாகும் தன்மையை உருவாக்குகிறது. முன்பெல்லாம் ஒரு நட்பைச் சந்திக்க வேண்டுமெனில், சிரமப்பட்டு வெளியில் போய் ஐந்தாறு பேரை சந்தித்து, காபி சாப்பிட்டு வருவோம். இப்போது, உட்கார்ந்த இடத்திலேயே சண்டை சச்சரவுகள், கருத்துப் பரிமாற்றங்கள் சாத்தியமாகிறது.தினமும் பல் துலக்கும் பழக்கம் எப்படி இயல்பானதாக ஆகிறதோ, அதுபோல மொபைல் போன் பார்க்கும் பழக்கமும் இயல்பானது என, குழந்தைகள் நினைத்து விடுகின்றனர்.இதனால், தலைவலி, கழுத்துவலி, வெறுமை உணர்வு, எரிச்சல், மனநிலை மாற்றங்கள் என எத்தனையோ பிரச்னைகளுக்கு ஆளாகி விடுகின்றனர்.கல்வியில் கவன மின்மை, வேலை செயல்திறன் குறைபாடுகள் உருவாகின்றன.போனில் தவறான பயன்பாட்டை தவிர்த்து, சரியான விதத்தில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை, 'யு டியூபில்' ஒரு வீடியோ போட்டோ, வகுப்பெடுத்தோ மாற்ற முடியாது.கடந்த, '80களில் தாய்ப்பால் பழக்கத்துக்கு மாற்றாக, 'டின்' பால் பழக்கத்தை அதிகரிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் உலகத்தையே விளம்பரங்களால் திக்குமுக்காட வைத்தன. 'தாய்ப்பாலையே நிறுத்தி விடுங்கள்' என, பிரசாரம் செய்தனர்.பின், ஐந்தாறு குழந்தை நல மருத்துவர்கள், தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து தொடர்ச்சியாக பிரசாரம் செய்து, தாய்ப்பால் பழக்கத்தை அதிகரித்தனர்.இளம் தலைமுறையினர், மொபைல் போன் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வுக்காக, ஆவணப்படம் தயாரித்து, மக்களிடம் மாற்றத்தை உருவாக்குங்கள்.ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் உங்களுக்கு துணை நிற்கிறேன்.பாஸ் ஓகேசொல்கிறார்கள்/ நக்கீரன் 27.12.2021..........................................................-------------------------------------------------

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜன-202201:00:33 IST Report Abuse
Bhaskaran இவர் தாத்தா ஜமதக்கினி மிகப்பெரிய வடமொழி வல்லுநர் .இவர் பகுத்தறிவு வாதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X