கிளர்ச்சியாளர் பிடியில் சிக்கிய கப்பல் குழுவினருடன் பேச்சு

Added : ஜன 13, 2022
Advertisement
நியூயார்க்:மத்திய தரைக்கடல் நாடான ஏமனில் 2014 முதல் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய படைகளும் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், சவுதி மீதும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.இங்குள்ள ஹோடெய்டா துறைமுக பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் கடந்த

நியூயார்க்:மத்திய தரைக்கடல் நாடான ஏமனில் 2014 முதல் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது.

ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய படைகளும் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், சவுதி மீதும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.இங்குள்ள ஹோடெய்டா துறைமுக பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி ஹோடெய்டா துறைமுகத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான 'ருவாபி' என்ற சரக்கு கப்பல் சென்றது.

அப்போது அதை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வழிமறித்தனர். கப்பலை கைப்பற்றி அதை செல்லவிடாமல் முடக்கினர். அந்த கப்பலில் ஏழு இந்தியர்கள் உட்பட கப்பல் குழுவினர் 11 பேர் சிக்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கப்பல் குழுவினருடன் பேச்சு நடத்தியதாக, ஐ.நா., குழுவினர் நேற்று தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X