எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் வீட்டு தனிமையில் இருப்போர்.. 24,000 பேர்!. வழிகாட்டி கையேடு வெளியிட்டது மாநகராட்சி

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022
Share
Advertisement
சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 24 ஆயிரம் பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சை பெற்று, போதிய ஓய்வும், நல்ல துாக்கமும் இருந்தால் விரைந்து குணமடையலாம் என, மாநகராட்சி வழிக்காட்டுதல் கையேடு வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தொற்று பரவல்
சென்னை, வீட்டு தனிமை,24,000 பேர்!. வழிகாட்டி ,மாநகராட்சி

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 24 ஆயிரம் பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சை பெற்று, போதிய ஓய்வும், நல்ல துாக்கமும் இருந்தால் விரைந்து குணமடையலாம் என, மாநகராட்சி வழிக்காட்டுதல் கையேடு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில், பாதிக்கப்படும் பலருக்கும் லேசான அறிகுறியே கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சையும், தீவிர சிகிச்சையும் தேவைப்படுகிறது. பெரும்பாலானோர் ஐந்து நாட்களுக்குள் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர்.

தற்போதைய சூழலில், சென்னையில் 35 ஆயிரத்து, 750 பேர் வரை சிகிச்சையில் உள்ள நிலையில், 24 ஆயிரத்து, 174 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மற்றவர்கள், மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேட்டை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


latest tamil news* தொற்றால் பாதிக்கப்பட்டோர், வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மாநகராட்சி பணியாளர்கள் தொலைபேசி வாயிலாகவோ, நேரிலோ தொடர்பு கொண்டு, நோயின் தீவிர தன்மையை கண்டறியும் வழிமுறைகளை விளக்குவர்

* அவ்வாறு தொடர்பு கொள்ளவில்லை என்றால், 044 - 2538 4520; 044 - 4612 2300 என்ற எண்களில் உதவிக்கு அழைக்கவும்


யாருக்கெல்லாம் வீட்டு தனிமை?* கொரோனா அறிகுறி இல்லாதவர்கள், குறைந்த அறிகுறி உள்ளவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள், ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் உள்ளவர்கள்

* வீட்டில் தனியறையுடன் கழிப்பறை வசதி இருக்க வேண்டும்; பராமரிக்க ஒருவர் உடனிருக்க வேண்டும்;

மாநகராட்சியின் மருத்துவ குழு வீட்டிற்கு வந்து பரிசோதிப்பர் பின்பற்ற வேண்டியவை.

* தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டம் உள்ள தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்>

* வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறைக்குள் நுழையக்கூடாது.

* சத்தான உணவை சாப்பிடுங்கள்; மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக்கொள்ளுங்கள்.

* போதுமான அளவு தண்ணீர், பழரசம் குடிக்கவும்.

* பிறரிடம் பேசுவதை தவிர்த்துவிடுங்கள்; மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால், சர்ஜிக்கல் அல்லது என் 95 முக கவசம் அணிந்து பேசுங்கள்,.

* போதிய ஓய்வும், துாக்கமும் அவசியம்; சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதை தவிர்க்கவும்.

* அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது, 20 நொடிகள் நன்கு தேய்த்து கைகளை கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.

மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள். பொருட்களை மற்றவர்களிடம் பகிர கூடாது. கழிவுகளை தனி பையில் சேகரித்து அப்புறப்படுத்தவும்.

* பல்ஸ் ஆக்சிமீட்டரின் வாயிலாக ஆக்சிஜன் அளவையும், அபாய அறிகுறியும் கண்காணியுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


200 மருத்துவ குழுக்கள்!சென்னையில், தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோரின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க, வார்டுக்கு ஒரு மருத்துவ குழு என, 200 குழுக்கள் உள்ளன. மேலும், தினசரி உடல்நிலையை கண்காணிக்க, 1,000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


காய்ச்சல் துவக்க நிலையில்என்ன மருந்து எடுக்கலாம்.,* பாரசிட்டமால் 500 எம்.ஜி., மாத்திரை ஒன்று.

* வைட்டமின் சி 500 எம்.ஜி., சத்து மாத்திரை ஒன்று.

*ஜின்க் 50 எம்.ஜி., மாத்திரை ஒன்று அறிகுறிகள் குறையும் வரை, மாத்திரைகளை காலை உணவு உண்ட பின் உட்கொள்ளவும்.


அபாய அறிகுறிகள் என்ன?.* ஐந்து நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல், தொடர் இருமல்.

*மூச்சு விடுவதில் சிரமம், அதிகபடியான சோர்வு, தேவையற்ற குழப்பம் மற்றும் மயக்கம் மார்பில் அழுத்தம் அல்லது வலி, ஆக்சிஜன் அளவு 94க்கும் குறைவாக இருத்தல்.

* ஒரு நிமிடத்திற்கு உங்கள் மார்பு அல்லது வயிறு எத்தனை முறை உயர்கிறது என்பதை கணக்கிடும், சுவாச எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு, 24க்கு மேல் இருத்தல்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X