'மாஜி' சிறை அதிகாரிக்கு துாக்கு

Added : ஜன 13, 2022
Share
Advertisement
கொழும்பு:இலங்கை வெலிக்கடை சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையின் முன்னாள் கண்காணிப்பாளருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் வெலிக்கடை சிறையில் கைதிகளிடம் போதைபொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து 2012 நவ.,9ல் சிறையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறையில் பயங்கர மோதல் ஏற்பட்டது.
 'மாஜி' சிறை அதிகாரிக்கு துாக்கு

கொழும்பு:இலங்கை வெலிக்கடை சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையின் முன்னாள் கண்காணிப்பாளருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் வெலிக்கடை சிறையில் கைதிகளிடம் போதைபொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து 2012 நவ.,9ல் சிறையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவா, வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்க ஜீவா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை கண்காணிப்பாளராக இருந்த எமில் ரஞ்சனுக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X