பரமக்குடி : பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில்வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு, பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்ககோலாகலமாக நடந்தது.
பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சாமி கோயிலில் நேற்று காலை ராமர் சங்கு, சக்கரம், வில் அம்பு, கதாயுதம் ஏந்தி ஏகாந்த சேவையில் அருள் பாலித்தார். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்து, கோயில் வடக்கு வாசலை கடந்து காலை 6:00 மணிக்கு வந்தார். தீபாராதனைக்கு பின் கோயில் கிழக்கு வாசல் வழியாக ஆண்டாள் மண்டபத்தில் எழுந்தருளினார்.* பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் ராப்பத்து நிகழ்வின் போது, பெருமாள் மோகினி அவதாரத்தில் மாலை 5:00 மணிக்கு வலம் வந்தார். ஆறு மணிக்கு பெருமாள் கோயிலை அடைந்து நடை சாத்தப்பட்டது.நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, பல்லாண்டு, திருப்பாவை பாடப்பட்டு, பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக 5:30 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின்னர் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தாயார் மண்டபத்தில் எழுந்தருளினார்.* எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்த சேவையில் சொர்க்கவாசல் வழியாக வந்தார். சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.* பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கிருஷ்ணர் பஜனை மடத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டது.*பரமக்குடி நந்த கோபால கிருஷ்ணர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE