அரசு கட்டுப்பாடு எதிரொலி: பழநியில் குவிந்த பக்தர்கள்| Dinamalar

அரசு கட்டுப்பாடு எதிரொலி: பழநியில் குவிந்த பக்தர்கள்

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (2) | |
பழநி:பழநியில், தைப்பூசத்தை ஒட்டி திரண்ட பாதயாத்திரை பக்தர்களின் கூட்டத்தால் நகரே குலுங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால், முன்னதாகவே குவிந்த பக்தர்களால், பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவை ஒட்டி, கடந்த மாதம் முதலே பாதயாத்திரை பக்தர்கள் வரத்
 அரசு கட்டுப்பாடு எதிரொலி: பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி:பழநியில், தைப்பூசத்தை ஒட்டி திரண்ட பாதயாத்திரை பக்தர்களின் கூட்டத்தால் நகரே குலுங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால், முன்னதாகவே குவிந்த பக்தர்களால், பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவை ஒட்டி, கடந்த மாதம் முதலே பாதயாத்திரை பக்தர்கள் வரத் துவங்கி விட்டனர். தைப்பூசம் நெருங்க நெருங்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது.'இன்று முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என அரசு அறிவித்துள்ளது.

இதனால், தைப்பூசத்தில் பக்தர்கள் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. எனவே, பலரும் முன்னதாகவே கோவிலுக்கு வரத்துவங்கினர்.இதனால், நேற்று பழநியில் அதிகபட்ச பக்தர்கள் திரண்டனர். வீதிகளில் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பக்தர்கள் 'அரோகரா' கோஷத்துடன் சென்றனர்.பழநி மலைக் கோவில், அடிவாரம், சன்னிதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொது மற்றும் கட்டண தரிசனம், வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பஞ்சாமிர்தம் பற்றாக்குறைநேற்று முன்தினம் முதல் பக்தர்கள் குவிந்ததால், பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரவு, பகலாக பஞ்சாமிர்தம் தயாரிப்பு மும்முர மாக நடக்கிறது.'அவை அனைத்து கடைகளுக்கும் வழங்கப்படுகிறது. இருப்பினும், கூட்டம் அதிகரிப்பதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X