மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, காரில் கடத்தி வரப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காலகஸ்திநாதபுரம், மாத்துார் சாலையில், செம்பனார்கோவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். டூ - வீலரில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
அவரை பின் தொடர்ந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 5,100 சாராய பாக்கெட்டுகள், 400 சாராய பாட்டில்கள் சிக்கின.காரில் வந்த இருவரிடம் விசாரணை செய்ததில், காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு, பொங்கல் விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக சாராயம் கடத்தி செல்வதும், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக டூ - வீலரில், பைலட்டாக காருக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்ததும் தெரிந்தது.
இதையடுத்து, 6.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராயத்தையும், கார் மற்றும் டூ - வீலரையும் போலீசார் பறிமுதல் செய்ததுடன், மூவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE