ராணிப்பேட்டை:அரசு வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மேச்சேரியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45. இவரது உறவினர், திருப்பத்துார் மாவட்டம், செவ்வாத்துாரைச் சேர்ந்த தேன்மொழி, 35. இவர் மகளிர் குழு நடத்தி வருகிறார்.தனக்கு சென்னையில் அரசு உயர் அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கான கமிஷனை தந்து விடுவதாகவும் ஏழுமலையிடம் கூறினார்.
இதை நம்பிய ஏழுமலை, பலரை தேன்மொழியிடம் அழைத்து வந்தார். அவர்களுக்கு ஆவின், தலைமை செயலகம், தபால் துறை ஆகியவற்றில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 2018ல், 25 பேரிடம், 60 லட்சம் ரூபாயை தேன்மொழி வாங்கினார். யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்படி, கலவை போலீசார், திருப்பத்துாரில் பதுங்கியிருந்த தேன்மொழியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE