உள் வாடகையில் கடைகள் மீட்டது தஞ்சை மாநகராட்சி

Added : ஜன 14, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், உள் வாடகைக்கு விடப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான ஆறு கடைகளை, நேற்று மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு, பொது ஏலம் வாயிலாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர், சட்டவிரோதமாக, கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.சில
 உள் வாடகையில் கடைகள் மீட்டது தஞ்சை மாநகராட்சி

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், உள் வாடகைக்கு விடப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான ஆறு கடைகளை, நேற்று மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு, பொது ஏலம் வாயிலாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர், சட்டவிரோதமாக, கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் ஆய்வு செய்தபோது, புதிய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள டாஸ்மாக் மதுக்கடை, பார் உட்பட ஆறு கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டுஇருப்பது தெரியவந்தது.

மாதம் 12 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கடை, மாதம் 40 ஆயிரம் ரூபாய் உள் வாடகைக்கு விடப்பட்டு, சட்டவிரோதமாக வருவாய் ஈட்டியது கண்டறியப் பட்டது. அந்த கடைகளை காலி செய்யுமாறு உரிமதாரர்களுக்கு, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து உரிமதாரர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.இதையடுத்து, மாநகராட்சி வருவாய் அலுவலர் சங்கர வடிவேல் தலைமையிலான அலுவலர்கள், ஆறு கடைகளையும் கையகப்படுத்தி பூட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X