பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: சிறந்த காளைக்கு கார் பரிசு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (3)
Share
Advertisement
அவனியாபுரம் : ''அவனியாபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது,'' என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பணிகளை ஆய்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: சிறந்த காளைக்கு கார் பரிசு

அவனியாபுரம் : ''அவனியாபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது,'' என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.அமைச்சர் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறப்பு பரிசாக சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு டூவீலர் வழங்கப்படுகிறது.

மேலும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மதிக்கத் தக்க அளவில் இப்போட்டியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஆன்லைன் பதிவு செய்தவர்களில் சிலருக்கு அனுமதி வரவில்லை என்று கூறப்படுகிறது.

எந்த பாகுபாடு, குறைபாடும் இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட முறைகேடு இந்த ஆண்டு நடைபெறவில்லை, என்றார்.கலெக்டர் கூறுகையில், ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்த காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களில் தேர்வானவர்களுக்கு அதற்கான அனுமதி சீட்டை madurai.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202210:28:58 IST Report Abuse
Tamilan சிறந்த காளை என்பதை எப்படி தேர்தெடுப்பார்கள். பார்த்த பத்து பதினைந்து நிமிசத்தில் வந்த அணைத்து காளைகளையும் (பத்து இருபது காளைகளை) யாருமே அடக்க முடியவில்லை . எப்படி சிறந்த வீரரையும் தேர்ந்தெடுப்பார்கள் ?.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
14-ஜன-202217:08:38 IST Report Abuse
DVRRஎனக்கும் இந்த சந்தேகம் வந்தது ஆனால் முருகன் என்பவரை தேர்ந்தெடுத்தார்களாமே அவர் தான் 19 காளைகளை அடக்கினாராம்??? ஒண்ணுமே புரியல உலகத்திலே மர்மமாய் இருக்குது. "அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5ம் சுற்று முடிவில் 19 காளைகளை அடக்கிய வளையாங்குளம் முருகன் முதல் இடம் பிடித்து உள்ளார்"....
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-ஜன-202208:09:05 IST Report Abuse
mindum vasantham Kaalaikalukku importance koduppavan tamilan vetti sappiduraan telugu kristhavar dravidar thiruvalluvar against pesirukkaar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X