பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: விரைந்து முடிக்க அறிவுரை

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை : பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப் பட்டுள்ளது. தற்போது 15 முதல் 18 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு
Corona Vaccine, School Students, Vaccine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.



கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப் பட்டுள்ளது. தற்போது 15 முதல் 18 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் கொரோனா பரவல் சமீபத்தில் அதிகரித்துள்ளதால் பள்ளிகளில் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.இதன் காரணமாக பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு பின் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இருந்தால் ஒன்றிரண்டு நாட்களில் அனைத்து மாணவ - மாணவியருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202210:48:39 IST Report Abuse
Tamilan அறிவுறுத்த வேண்டியது அன்னையர்களுக்கு, அந்நிய எஜென்டுகளுக்கு, அவர்களின் எடுபிடிகளுக்கு. பள்ளிகளுக்கு அல்ல. அவரவர் விரும்பும் பொது போட்டுக்கொள்வார்கள் .
Rate this:
Cancel
Rajagopal Subramaniam - Chennai,இந்தியா
14-ஜன-202208:04:12 IST Report Abuse
Rajagopal Subramaniam தினசரி கோவிட நிலவரம் மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவல். தங்கள் மாவட்டத்தில் நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே கருத்துக்கள் இல்லையென்றாலும் அதை தொடர்ந்து பதிவிடவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X