அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அரசு வீழும் நாள் தூரத்தில் இல்லை: பன்னீர்செல்வம் காட்டம்

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை : பொங்கல் தொகுப்பில் இருந்த குறையை சுட்டிக்காட்டியவர் மீது, பொய் வழக்கு போட்டு, அந்தக் குடும்பத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த, தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க.,வின் அதிகார செல்வச் செருக்கை முறித்தெறிய வேண்டிய கடமை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில்,
OPS, Panneerselvam, ADMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பொங்கல் தொகுப்பில் இருந்த குறையை சுட்டிக்காட்டியவர் மீது, பொய் வழக்கு போட்டு, அந்தக் குடும்பத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த, தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:


தி.மு.க.,வின் அதிகார செல்வச் செருக்கை முறித்தெறிய வேண்டிய கடமை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சாதாரண மக்கள் மீதான தி.மு.க.,வின் அடக்குமுறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இறந்து கிடந்ததை, நந்தன் என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


latest tamil newsஇது, அ.தி.மு.க., சார்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. பிற பகுதிகளில் இதுபோன்று நிகழக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, அரசின் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல.அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதுதான் அரசின் ஆக்கப்பூர்வமான செயல். அதை விடுத்து, குறையை சுட்டிக்காட்டுபவர் மீதே, நடவடிக்கை எடுப்பது, உண்மையை மூடி மறைக்க முற்படும் செயல்.

அவர் மீது ஜாமினில் வர இயலாத அளவுக்கு, ஒரு வழக்கை, திருத்தணி போலீசார் பதிவு செய்துள்ளனர்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, அவரது மகன் பாபு என்கிற குப்புசாமி தீக்குளித்து இறந்துள்ளார். குப்புசாமி இறப்புக்கு தி.மு.க., அரசே காரணம். மக்கள் பயப்படும்படியாக ஆட்சி நடத்தும், இந்த அரசு வீழும் நாள் வெகு துாரத்தில் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
14-ஜன-202216:09:07 IST Report Abuse
DVRR தி.மு.க., அரசு வீழும் நாள் தூரத்தில் இல்லை???அப்போ இரண்டு கூட்டம் சந்தோஷப்படும் ஒன்று தமிழர்கள் கூட்டம் - திருட்டு திராவிட மடியல் அரசு ஒழிந்தது என்று.இன்னொன்று திருட்டு திராவிட கூட்டம் - பின்னேயும் ஒட்டு போடுவதற்காக ரூ 5000 ஒரு வோட்டுக்கு கிடைக்குமே என்று. ஹே பாவிகளே கூட்டம் கொஞ்சம் திக் திக் திக் என்று பயப்படும்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
14-ஜன-202215:21:44 IST Report Abuse
Kumar ஜெயலலிதா அவர்கள் தீயசக்தி என்று கூறியது சரிதான்,. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
14-ஜன-202214:00:40 IST Report Abuse
periasamy பாபம் நிறைய நபர்கள் புலம்புகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X