இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா?

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (18)
Share
Advertisement
வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடுகள்
India, US, Russia, Joe Biden, US President

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கும் வகையில் 'காட்சா' என்ற கடுமையான சட்டத்தை 2017ல் அமெரிக்கா அறிமுகம் செய்தது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்க 2017ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. தற்போது அந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. அதனால் நட்பு நாடான இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்க எம்.பி.,க்களிடையே பொருளாதார தடை கொள்கைக்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரதிநிதியான ஜேம்ஸ் ஓபிரையன் விளக்கம் அளித்தார்.


latest tamil news


அப்போது எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகள் வாங்கியதாக துருக்கி மீது நாம் பொருளாதார தடை விதித்தோம். அதே நேரத்தில் நம் நட்பு நாடான இந்தியா மீதும் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து எம்.பி.,க்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா வலுவாக இருப்பது முக்கியம். சீனா, பாகிஸ்தானுடன் எல்லை பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகிறது.

தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்தே ஆயுதங்களை வாங்கி வருகிறது. இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகள் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. பல விஷயங்களை ஆராய்ந்தே இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202218:58:44 IST Report Abuse
அப்புசாமி இன்னும்.ஒரு 50000 கோடிக்கு அபாச்சி, திருப்பாச்சி யெல்லாம் மெரிக்கா கிட்டே விக்காம இருக்குதாம். நாம வாங்கலேன்னா பொருளாதாரத் தடை விதிப்பாரு பைடன். ஆனா ஒண்ணு. அமெரிக்காகாரன் கிட்டே வாங்குனா, திரும்பி அவன்கிட்டேயே சம்பாரிக்கலாம். ரஷ்யா கிட்டே வாங்கிட்டே இருக்க வேண்டியதுதான். ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லே.. சொல்லுங்க... ஆறு பெரிய அமெரிக்கா கம்பெனிகளில் இந்தியன் தலைவராக இருக்கான். ரஷ்யாவுல நம்ம ஆள் ஒரு டீக்கடை கூட வெக்க முடியுமா?
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
14-ஜன-202217:43:48 IST Report Abuse
Sankar Ramu அதுக்கு வாய்ப்பே இல்ல. எந்த நாட்டுக்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க தைரியம் கிடையாது. இது மோடி இந்தியா, வச்சி செய்திடுவோம்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202217:42:23 IST Report Abuse
Tamilan ....
Rate this:
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:39:05 IST Report Abuse
Tamilan.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X