பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு குளறுபடி; காரியத்தை கெடுத்த ஆளும் கட்சியினர்; பல கோடி ரூபாய்க்கு முறைகேடு!

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (84)
Share
Advertisement
பொங்கல் பரிசு தொகுப்பு டெண்டரில், ஆளும்கட்சிக்கு வேண்டிய இடைத்தரகர்கள் சப்ளை செய்வதாகக் கூறி, சப் டெண்டர் பெற்றதே குளறுபடிகளுக்குக் காரணமென தெரியவந்துள்ளது.தமிழகத்திலுள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கடந்த நான்காம் தேதியிலிருந்து ரேஷன் கடைகளில், டோக்கன்

பொங்கல் பரிசு தொகுப்பு டெண்டரில், ஆளும்கட்சிக்கு வேண்டிய இடைத்தரகர்கள் சப்ளை செய்வதாகக் கூறி, சப் டெண்டர் பெற்றதே குளறுபடிகளுக்குக் காரணமென தெரியவந்துள்ளது.

தமிழகத்திலுள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கடந்த நான்காம் தேதியிலிருந்து ரேஷன் கடைகளில், டோக்கன் முறையில் இவை விநியோகிக்கப்படுகின்றன. இதற்காக ரூ.1,088 கோடி, அரசு செலவிட்டும், மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளது.



latest tamil news



இந்தத் தொகுப்பில், பொருட்கள் குறைவாகவும், தரமின்றியும் இருப்பதுமே அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது.இந்த ஆண்டில், முதலில் 'ஜிப்' வைத்த பை கொடுப்பதற்கு ஆலோசனை நடந்து, திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் மாதிரியும் பெறப்பட்டுள்ளது. ஆனால், அது சரிவராது என்று அரசு தரப்பில், நிராகரிக்கப்பட்ட பின், தற்போது தரப்படும் பைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அதிலும், 'கேந்திரியா பந்தர்' என்ற மத்திய அரசு நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள், இந்த ஆர்டரைப் பெற்றுள்ளன.

ஏற்கனவே, தமிழக அரசுக்கு 'அம்மா பேபி கிட்', 'அம்மா நியூட்ரிஷன் கிட்' போன்ற பொருட்களை, சப்ளை செய்த நிறுவனங்கள், இந்நிறுவனத்தில் சப் டெண்டர் எடுத்து, பல லட்சம் பைகளை விநியோகித்துள்ளன. இதேபோல, வழக்கமாக அரசுக்கு துணி வகைகளை சப்ளை செய்யும் பல நிறுவனங்களும் டெண்டர் எடுத்து, உரிய நேரத்தில் பைகளை சப்ளை செய்துள்ளன.
ஆனால் துறையின் வி.ஐ.பி.,க்கு வேண்டிய ஆளும்கட்சியினர் சிலர் இடைத்தரகர்களாக மாறி, 'நாங்களும் செய்கிறோம்' என்று சப் டெண்டர் எடுத்துச் செய்ததில்தான், பைகள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாமல் தாதமாகியுள்ளது. தரமில்லாத பொருட்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுவே, அரசுக்கு அவப்பெயர் ஏற்படவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டவும் முக்கியக் காரணமாகியுள்ளதாக அதிகாரிகள் குமுறுகின்றனர்.


latest tamil news



அதேபோன்று, கரும்பு, முந்திரி, திராட்சை, நெய், பை தவிர்த்த 14 பொருட்கள், 363 ரூபாய்க்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. கேந்திரியா பந்தர், அருணாசலம் இம்பேக்ஸ், ஐ.எஸ்.பி., சொல்யூஷன்ஸ் என்ற மூன்று நிறுவனங்கள்தான், டெண்டர் எடுத்துள்ளன. இவற்றில் இரண்டு நிறுவனங்களின் பெயர்களில், அ.தி.மு.க., ஆட்சியில் கோலோச்சிய நிறுவனங்களே, சப் டெண்டர் எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் நிறுவனம், திருப்பூர் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், கருப்புப் பணத்தைக் கொண்டு மிகவும் குறைவான விலைக்கு சப் டெண்டர் எடுத்ததால்தான், தரம் குறைவான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு முழுக்கரும்புக்கு 33 ரூபாய் அரசு நிதி ஒதுக்கிய நிலையில், விவசாயிகளுக்கு அதிகபட்சம் 13 லிருந்து 15 ரூபாய்தான் தரப்பட்டதாக விவசாயிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதைத்தான் 30 கோடி ரூபாய் ஊழல் என்று அ.தி.மு.க.,வும் குற்றம்சாட்டியுள்ளது.


latest tamil news



உண்மையில், 1,088 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டரில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், மக்கள் நேரடியாகப் பயன்பெறும் பொருட்களுக்கான முதல் டெண்டர் இதுதான் என்ற வகையில், இதில் நடந்துள்ள குளறுபடிகளும், ஆளும்கட்சியினர் தலையீடும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. இது எதிர்காலத்தில் தொடராமல் இருக்க, முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கும், துறைகளின் அமைச்சர்களுக்கும் கடிவாளம் போட வேண்டியது கட்டாயம்.


-நமது சிறப்பு நிருபர்-


Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21-ஜன-202207:37:54 IST Report Abuse
Swaminathan Chandramouli திருட்டு தீய சக்தி திமுக ஆளுநார்கள் தான் இதற்க்கு காரணம் , இந்த திமுக அரசாங்கத்தை உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஜன-202205:24:28 IST Report Abuse
J.V. Iyer தமிழ்நாட்டை மீண்டும் ஆளுவதற்கு மக்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும்போது, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இப்படியா? இவர்கள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டை. நாய்வாலை நிமிர்த்தமுடியாது. முன்புதான் திமுக, அதிமுக என்று மாற்றி, மாற்றி. இப்போது பாஜக வந்துவிட்டது, அதிரடியாக. இதுவே திராவிஷ கட்சிகளின் கடைசி ஆட்சியாக இருக்கட்டும்.
Rate this:
Cancel
AKM KV SENTHIL MUSCAT - muscat,ஓமன்
17-ஜன-202217:07:36 IST Report Abuse
AKM KV SENTHIL MUSCAT ரொம்ப கேவலம் ரொம்ப ரொம்ப கேவலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X