பொது செய்தி

தமிழ்நாடு

விடுமுறையில் ஊர் சுற்றாதீங்க.. வேகமாக பரவுது கோவிட்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரை : தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து திருநெல்வேலியில் கொரானோ தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் எட்டு தென் மாவட்டங்களில் 2067 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர். 6 பேர் பலியாகினர்.மதுரையில் கொரோனா தொற்றுக்கு நேற்று மூன்று பேர் பலியாகினர். புதிதாக 599 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஜன. 11 முதல் தினசரி பாதிப்பு 500 ஆக உயர்ந்து வருகிறது. நேற்று 61 பேர்
Corona, Covid 19, Corona Virus

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து திருநெல்வேலியில் கொரானோ தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் எட்டு தென் மாவட்டங்களில் 2067 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர். 6 பேர் பலியாகினர்.

மதுரையில் கொரோனா தொற்றுக்கு நேற்று மூன்று பேர் பலியாகினர். புதிதாக 599 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஜன. 11 முதல் தினசரி பாதிப்பு 500 ஆக உயர்ந்து வருகிறது. நேற்று 61 பேர் குணமடைந்தனர். மருத்துவமனையில் 2186 பேர் சிகிச்சையில் உள்ளனர். 600 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

மொத்தமுள்ள 2205 ஆக்சிஜன் படுக்கைகளில் 222 பேரும் 943 சாதாரண படுக்கைகளில் 142 பேரும் 665 ஐ.சி.யு. படுக்கைகளில் 20 பேரும் 814 கோவிட் கேர் சென்டர்களில் 30 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ஜன. 1 முதல் நேற்று வரை மொத்த பலி 5 ஆனது.


latest tamil news


மதுரையில் நேற்று 599 திண்டுக்கல் 122 தேனி 134 சிவகங்கை 59 ராமநாதபுரம் 388 விருதுநகர் 293 துாத்துக்குடி 343 திருநெல்வேலியில் 415 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். எட்டு மாவட்ட மருத்துவமனைகளில் 7243 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 2000 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

சென்னை செங்கல்பட்டு கோவை திருவள்ளூரை அடுத்து தொற்று பாதிப்பில் மதுரை மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. மதுரையை அடுத்து திருநெல்வேலியும் அதிக பாதிப்பில் உள்ளது. பொங்கல் விழாவையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் வாரத்தில் தொற்று பரவல் பல மடங்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை வெளியே சுற்றாமல் வீட்டில் இருப்பதே நல்லது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202216:48:07 IST Report Abuse
அப்புசாமி ஊட்டுக்குள்ளேயே இருந்தா எப்புடி கொரோனாவோட பழகுறது? கொரோனாவோட வாழக் கத்துக்கறது?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
14-ஜன-202214:59:56 IST Report Abuse
J. G. Muthuraj இப்படி ஒரு மெசேஜ்....கொரனாவோடு வாழ கத்துக்கிடனும் என்று ஒரு இன்னொரு அறிவுரை......ஊர் சுற்றுவார்கள் இரண்டாம் அறிவுரையத்தான் பின்பற்றுகிறார்கள்.....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜன-202217:58:11 IST Report Abuse
Visu Iyerவிலைவாசி ஏற்றத்துடன் வாழ பழக்கவில்லையா.. ? இது போல இதையும் பழகி கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.. ?...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜன-202214:17:23 IST Report Abuse
Visu Iyer பரவினால் என்ன.. பரவட்டுமே.. வந்தால் குணமாயிட போகுது.. இதுக்கு ஏன் இத்தனை பில்ட் அப்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X