கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழிசை பற்றி விமர்சனம்: நாஞ்சில் சம்பத் வருத்தம்

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை : 'என் பேச்சால், பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகித்த தமிழிசையை விமர்சித்து பேசியதாக, அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல போலீஸ்
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : 'என் பேச்சால், பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகித்த தமிழிசையை விமர்சித்து பேசியதாக, அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில், சம்பத்துக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போலீஸ் வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சம்பத் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தன.அப்போது, சம்பத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தனிப்பட்ட முறையில், அந்த தலைவரை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

'அவர் பரப்பும் கொள்கைக்கு எந்த ஆதரவும் கிடையாது; அத்தகைய தலைவரை பின்பற்றும் எவருக்கும் பலன் கிடையாது என்று தான் விமர்சித்தேன். என் பேச்சால் அவர் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.

சம்பத் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று, வழக்குகளை ரத்து செய்யக் கூடாது எனவும், வழக்கை விசாரிக்க கோரியும் பா.ஜ., வழக்கறிஞர் அலெக்ஸ் முறையிட்டார்.இதையடுத்து, வழக்கு டைரியை தாக்கல் செய்வதற்காக, விசாரணையை, வரும் 19ம் தேதிக்கு நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat Subbarao - Chennai,இந்தியா
18-ஜன-202210:26:17 IST Report Abuse
Venkat Subbarao இந்த நபருக்கு வேண்டாத வேலை திட்டும்போது இஷ்டத்திற்கு திட்டுவான் நாக்கு இருக்கிறது என்பதால், இவனெல்லாம் ஒரு பேச்சாளனா?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜன-202205:20:38 IST Report Abuse
meenakshisundaram சில்லறைக்கு பேசும், கட்சி மாறும் இவன் இன்று ஒரு 'சில்லரை' நடிகன்?
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
15-ஜன-202207:15:36 IST Report Abuse
karupanasamy துப்பினால் துடைத்துக்கொள்வேன் என்று சொன்ன இவனுக்கு இவன் சொன்னதையே பொது இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இவனை செய்ய வைத்து அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X