பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் தி.மு.க.,; பா.ஜ., விவசாய அணி குற்றச்சாட்டு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை: ஆந்திரா, மகாராஷ்டிரா விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் செயல்களில் தி.மு.க., ஈடுபடுவதாக பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றம்சாட்டினார். கோவை, கிணத்துக்கடவு பகுதியில் பா.ஜ., சார்பில், பஞ்சாப் காங்., அரசின் அலட்சியத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சியில் பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள்

கோவை: ஆந்திரா, மகாராஷ்டிரா விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் செயல்களில் தி.மு.க., ஈடுபடுவதாக பா.ஜ., விவசாய அணி தலைவர் குற்றம்சாட்டினார்.



latest tamil news



கோவை, கிணத்துக்கடவு பகுதியில் பா.ஜ., சார்பில், பஞ்சாப் காங்., அரசின் அலட்சியத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சியில் பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கையெழுத்திட்டனர். இதன்பின் கோதவாடி குளம் பகுதியில் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டனர். பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகளை குறிவைத்து மிரட்டி அக்கட்சியில் ஆட்களை சேர்க்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பொங்கல் பொருட்களுடன் பணம் தந்து தை திருநாளை கொண்டாட வைத்தார்.


latest tamil news



தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு கரும்பு, வெல்லம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு, 1,297 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், முறைகேடு நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம், கோதுமை ரவை போன்ற பொருட்களை கொடுக்க தயாராக உள்ள நிலையில், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் கொள்முதல் செய்து தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் செயல்களில் தி.மு.க., ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
14-ஜன-202213:46:42 IST Report Abuse
Ram விடியா அரசின் சாதனைகள் தொடரும்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14-ஜன-202212:26:35 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN அறிவில்லாமல் சுயமாக யோசிக்காமல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் இது போன்ற சம்பவங்கள் நடக்க தான் செய்யும், திருந்த வேண்டியது தமிழக மக்கள் தான்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஜன-202212:19:24 IST Report Abuse
S. Narayanan தமிழக அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X