மிகப் பெரிய பலமான திட்டங்களுடன் காய் நகர்த்திக் கொண்டிருந்தார் நேதாஜி. பல வகையிலும் போராடி, போரிட்டு, இந்தியாவிற்கு விடுதலை பெற்று தரவேண்டும் என்ற வேகத்தில் அவருடைய திட்டங்கள் அமைந்திருந்தன. ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரை சந்தித்தார் நேதாஜி. இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெர்மனி உலக சமுதாயத்தின் முன் வைத்தால் லட்சக்கணக்கான வீரர்களை தன்னால் திரட்ட முடியும் என்று சொன்னார் நேதாஜி.
ஹிட்லர் அப்போது ரஷ்யாவை தாக்கும் திட்டத்துடன் இருந்ததால் அப்படி ஒரு அறிக்கையை தன்னால் வெளியிட முடியாது என்று மறுத்துவிட்டார். மேலும் ஆயுதம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் எதிர்த்தாலும் ஆயுதம் ஏந்திய ஒரு சிறிய ராணுவம் அந்த கலகத்தை அடக்கி விடும் என்று நேதாஜியிடம் தெரிவித்தார் ஹிட்லர்.
ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையே பல மைல் தொலைவுகள் இருப்பதையும் ஹிட்லர் கணக்கில் எடுத்துக் கொண்டார்.
அதேசமயம் இத்தாலியின் அதிபர் முசோலினி இந்தியாவிற்கு விடுதலை தரவேண்டும் என்ற அறிக்கையை வெளியிட ஒப்புக் கொண்டார். ஆனாலும் தனது நண்பரான ஹிட்லர் மறுத்துவிட்ட நிலையில் தானும் வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டார்.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE