தெய்வீகம் பொங்கி வழியும் தேவர் மண்டபம்.

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022
Share
Advertisement
சென்னை வடபழநியில் உள்ள வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிேஷகம் வருகின்ற 23 ந்தேதி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ளது.கும்பாபிேஷகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது பக்தர்கள் விரும்பிய பல மாற்றங்களும் நடந்துள்ளது.அவற்றில் ஒன்றுதான் மூலவர் சன்னதி எதிரே உள்ள தேவர் மண்டபம்.இந்த மண்டபத்தின்



latest tamil news


சென்னை வடபழநியில் உள்ள வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிேஷகம் வருகின்ற 23 ந்தேதி தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ளது.
கும்பாபிேஷகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது பக்தர்கள் விரும்பிய பல மாற்றங்களும் நடந்துள்ளது.
அவற்றில் ஒன்றுதான் மூலவர் சன்னதி எதிரே உள்ள தேவர் மண்டபம்.இந்த மண்டபத்தின் சுற்றுச்சுவர்கள் எந்தவித சிற்பங்களும் இல்லாமல் வெறுமையாக காணப்பட்டது.
தற்போது இந்த சுவரின் மூன்று பக்கங்களிலும் அறுபடை வீட்டு முருகனின் திருக்கோலம் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளது, முருகனின் வாகனமான மயில், மண்டபத்தின் முகப்பு பக்கத்தின் இருபுறமும் முப்பரிமாணத்தில் உள்ளது.


latest tamil news


மேலும்அகத்தியர்,சிவவாக்கியர்,திருமூலர்,போகர்,கொங்கணர்,மச்சமுனி,கோரக்கர்,சட்டைநாதர்,சுந்தாரானந்தர்,இராமதேவ சித்தர்,குதம்பை சித்தர்,கருவூரார்,இடைக்காடர்,கமலமுனி,வான்மீகர்,பதஞ்சலி,தன்வந்தரிபாம்பாட்டி சித்தர் என பதினெட்டு சித்தர்களும் அருள் பொழியும் முகங்களுடன் மண்டப சுவர்களை அலங்கரிக்கின்றனர்,மூலவரை தரிசித்துவிட்டு மண்டபத்தை சுற்றிவரும் போது இவை எல்லாம் பக்தர்களை நிச்சயம் பரவசப்படுத்தும்.
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X