பொது செய்தி

இந்தியா

கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்: கவர்னர் தமிழிசை

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுச்சேரி: 'புதுச்சேரியில், கொரோனா கட்டுப்பாடுகள் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என கவர்னர் தமிழிசை கூறினார்.கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கவர்னர் தமிழிசை, பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வணங்கினார்.விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுச்சேரி: 'புதுச்சேரியில், கொரோனா கட்டுப்பாடுகள் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என கவர்னர் தமிழிசை கூறினார்.

கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கவர்னர் தமிழிசை, பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வணங்கினார்.விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேல், செல்வகணபதி எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.



latest tamil news



கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பின்னர் கவர்னர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை விஞ்ஞானப் பூர்வமாக அணுகி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை மக்களின் உணர்வோடும், பண்பாட்டோடும் கலந்தது. புதுச்சேரி அரசு மக்களின் உணர்வுகளோடு இணைந்து பணியாற்றுகிறது.காணும் பொங்கல் அன்று அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் முழுவதுமாக நம்மை விட்டு போகாது என்பது, உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து.


latest tamil news



கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.சிறுவர்களுக்கு இன்னும் இரண்டு நாளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும். மாநிலத்தில் 90 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். விரைவில் 100 சதவீதம் எட்டப் படும்.கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுப்பூசியை வேகப்படுத்தவும் புதுச்சேரி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டினார். சில ஆலோசனைகளும் வழங்கி உள்ளார்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
15-ஜன-202207:52:11 IST Report Abuse
arudra1951 நாங்கள் மாட்டோம் என்று சொன்னோமா ?இதெல்லாம் என்னவிதமான அறிவுரை ?யாருக்கு தேவை ?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-202201:06:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ....
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
15-ஜன-202200:54:24 IST Report Abuse
Sathish உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து பரப்பி விட்டிருக்கிறார்கள். காலத்திற்கும் இது உருமாறிக்கொண்டே தான் இருக்கும். வீரியம் குறையும் ஆனால் இந்த வைரஸ் முற்றிலும் மறையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X