சீன காவல்துறைக்கு சவால் விடும் ஹாங்காங் காவல்துறை!

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஹாங்காங்: சீன காவல்துறைக்கு ஹாங்காங் காவல்துறை வித்யாசமான கால் அசைவு கொண்ட பேரணி மூலமாக சவால் விட்டு சீனாவுக்கெதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சீனாவின் இரும்புப் பிடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள ஹாங்காங் பல ஆண்டு காலமாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு வரை பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் சீனாவால் ஒரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹாங்காங்: சீன காவல்துறைக்கு ஹாங்காங் காவல்துறை வித்யாசமான கால் அசைவு கொண்ட பேரணி மூலமாக சவால் விட்டு சீனாவுக்கெதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.



latest tamil news



சீனாவின் இரும்புப் பிடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள ஹாங்காங் பல ஆண்டு காலமாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு வரை பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் சீனாவால் ஒரு பகுதியில் கட்டுப்படுத்தப்படும் நாடாக அறிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து ஹாங்காங்கில் 'ஒரு நாடு இரு சட்டம்' என்கிற கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங் நாட்டை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்கிறது. ஆனால், ஜனநாயக நாடான ஹாங்காங் சீனாவின் பிடியிலிருந்து தப்பி தனிநாடாக செயல்பட விரும்புகிறது. பொதுவெளியில் போராடிய ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் தற்போது சீனா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் தற்போது ஹாங்காங் போலீசார் சீன போலீசாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. போலீசார் அணிவகுப்பின் போது பொதுவாக ஹாங்காங் போலீசார் கால்களை நேராக வைத்துக்கொண்டு முட்டியை மடக்காமல் அணிவகுப்பு செய்வது வழக்கம்.


latest tamil news



கடந்த ஏப்ரல் 15ம் தேதி ஹாங்காங் தேசிய பாதுகாப்பு தினத்தன்று இதுபோன்று ஓர் காவல்துறை பேரணி ஹாங்காங்கில் நடத்தப்பட்டது. சீன போலீசாரின் அணிவகுப்பின்போது கால்களின் அசைவு ஹாங்காங் போலீசாரின் அசைவுகளில் இருந்து மாறுபடும்.
இனி ஹாங்காங் போலீசார் முக்கிய தினங்களில் பேரணி நடத்தும்போது ஹாங்காங் நாட்டுக்கே உண்டான பிரத்யேக கால் அசைவுகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
14-ஜன-202215:34:52 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN சீனாவை 5 துண்டுகளாக ஆக்க வேண்டும், திபெத்திய விடுதலையை நாம் கையில் எடுக்க வேண்டும், ஏனைய வற்றை அமெரிக்கா, ஐரோபா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்கு நமது உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையும் உதவவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X