ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (8)
Share
Advertisement
மெல்போர்ன்: செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்தது.மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஜோகோவிச் சென்றார். ஆனால், ஆஸ்திரேலியாவில் நுழைய தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாததால் ஜோகோவிச் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்து, மெல்போர்னில் தடுப்பு காவலில்
ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

மெல்போர்ன்: செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்தது.
மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஜோகோவிச் சென்றார். ஆனால், ஆஸ்திரேலியாவில் நுழைய தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாததால் ஜோகோவிச் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்து, மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தது.
தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்தது. மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. எனினும், குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து அலெக்ஸ் ஹாவ்கே கூறுகையில் 'பொது மக்களின் நலன் கருதி என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 133சி(3) பிரிவின் கீழ் நோவக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-ஜன-202210:32:42 IST Report Abuse
S.Baliah Seer சரியோ ,தவறோ சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.இது தெரிந்து இருந்தும் ஜேகோவிச் தடுப்பூசி போ டாமலேயே ஸ்பெஷல் பர்மிஷன் என்று சொல்லி விசா பெற்றது தவறு.இதற்கு முழுப்பொறுப்பு ஆஸ்திரேலிய டென்னிஸ் குழுதான்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-202218:19:04 IST Report Abuse
Sanny முதலில் இவரை இரண்டு தடுப்பு ஊசியை செலுத்தாது விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு கண்டித்து, தண்ட பணம் தரவிடாதது பெரியதவறு. இவரை விளையாட அனுமதித்தால், ஆஸ்திரேலியாவில் இரண்டு தடுப்பு ஊசியும் செலுத்த தவறியதால் வேலை இழந்தவர்களுக்கு நிவாரண நிதியுடன் மீண்டும் வேலை கொடுக்கவேண்டும், மற்றும் தடுப்புக்காவலில் இருக்கும் அகதிகளுக்கும் கோரிக்கை நிறைவேற்ற வேண்டிவரும். இன்னும் பல இருக்கு.....???
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
14-ஜன-202217:18:30 IST Report Abuse
a natanasabapathy சரியான முடிவு சட்டத்தை மதிக்காதவன் எவனாக இருந்தாலும் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X