ஒவ்வொன்றாக விழும் பா.ஜ., விக்கெட்டுகள்; அகிலேஷ் விமர்சனம்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (22)
Share
Advertisement
லக்னோ: பா.ஜ.,வில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாதி கட்சியில் இணையும் விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‛பா.ஜ.,வின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுவதாக' விமர்சித்துள்ளார்.உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே கடும் போட்டி
UP, Akhilesh Yadav, SP, BJP, Wickets, அகிலேஷ், அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி, பாஜ, விக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: பா.ஜ.,வில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாதி கட்சியில் இணையும் விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‛பா.ஜ.,வின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுவதாக' விமர்சித்துள்ளார்.

உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதற்கிடையே ஆளும் பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறினர். இதுவரை 3 அமைச்சர்கள், 5 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், ராஜினாமா செய்த பா.ஜ., அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் எம்எல்ஏ.,க்கள் ரோஷன்லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாப்தி, முகேஷ் வர்மா, வினய் சாக்யா, பகவதி சாகர் ஆகிய 5 பேர் மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அப்னா தளத்தின் சவுத்ரி அமர்சிங்கும் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.


latest tamil news


இதற்கான விழாவில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: நாங்கள் சட்டசபை தேர்தலுக்காக காத்திருந்தோம். சமாஜ்வாதியும் அம்பேத்கர்வாதியும் இணைந்துள்ளதை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜ.,வின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன. இருந்தாலும் நமது முதல்வர் கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர். சுவாமி பிரசாத் மவுரியா தன்னுடன் ஏராளமான தலைவர்களை அழைத்து வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
15-ஜன-202207:04:09 IST Report Abuse
Chandrasekaran Narayanan எதிர்காலத்தில் பிஜேபி பிற கட்சியினரை சேர்க்கும்போது ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202205:05:48 IST Report Abuse
J.V. Iyer அகிலேசு அவர்களே இப்படி வந்தவர்களுக்கு கண்டிப்பாக எம்.எல்.ஏ. சீட்டு கொடுங்க. மக்களுக்கு ஏதும் செய்யாததால், பாஜகவில் இவர்களுக்கு மீண்டும் சீட்டு கிடைக்காது என்று தெரிந்து அங்கு வருகிறார்கள். இது தெரியாத ஒரு தலைவர். ஏமாந்த சோணகிரி.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜன-202220:09:41 IST Report Abuse
Visu Iyer என்னது ஒவ்வொரு விக்கெட் ஆகா விழுந்து விட்டதா... சரி விடுங்க... இனி உபியில் கொரநா பரவல் அதிகமாக இருக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X