பொது செய்தி

இந்தியா

2016க்கு பிறகு 2021 அதிக வெப்பமான ஆண்டு: இந்திய வானிலை மையம் அறிக்கை

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 14, 2022
Share
Advertisement
புதுடில்லி: இந்திய வானிலை மையம் வெளியிட்ட வருடாந்திர காலநிலை அறிக்கையில், '1901லிருந்து இருக்கும் தகவல் படி 5வது முறையாக 2021ம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவு ஆகியுள்ளது' என தெரிவித்தது.மேலும் இன்று (ஜன.,14) வெளியிடப்பட்ட வானிலை மைய ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: 1901 முதல் வெளியிடப்பட்டு வரும் தகவல் படி 2021ம் ஆண்டு ஐந்தாவது வெப்பமான ஆண்டாகும். முன்னதாக 2009, 2010, 2016 மற்றும் 2017 ஆகிய
2021, India, Warmest Year, Since 1901, Weather Office, இந்தியா, வெப்பமான ஆண்டு, இந்திய வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்திய வானிலை மையம் வெளியிட்ட வருடாந்திர காலநிலை அறிக்கையில், '1901லிருந்து இருக்கும் தகவல் படி 5வது முறையாக 2021ம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவு ஆகியுள்ளது' என தெரிவித்தது.

மேலும் இன்று (ஜன.,14) வெளியிடப்பட்ட வானிலை மைய ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: 1901 முதல் வெளியிடப்பட்டு வரும் தகவல் படி 2021ம் ஆண்டு ஐந்தாவது வெப்பமான ஆண்டாகும். முன்னதாக 2009, 2010, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகள் அதிக வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. 2021ல் காற்றின் வருடாந்திர சராசரி வெப்பநிலை இயல்பை விட 0.44 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில் வெப்பநிலை கூடியதால் ஆண்டு வெப்பநிலை உயர்ந்துள்ளது.


latest tamil news


மேலும், 2021ல் இந்தியாவில் இடி, மின்னலினால் 787 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் மழை, வெள்ளம் போன்ற பாதிப்பினால் 759 பேர் இறந்துள்ளனர். புயல்களால் 172 பேர் பலியாகியிருக்கிறார்கள். பிற தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக 32 பேர் இறந்துள்ளனர். இது போன்ற இயற்கை இடர்களாக 2021ல் மொத்தம் 1,750 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X