டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா: கேப்டவுன் டெஸ்டில் தோல்வி

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில்
INDvSA, India Loss, Test Series, South Africa

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்னுக்கு சுருண்டது. பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்திருந்தது.


latest tamil news


நான்காம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கீகன் பீட்டர்சன் 82 விளாசினார். பின் இணைந்த வான் டெர் துசென், டெம்பா பவுமா ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜன-202211:30:02 IST Report Abuse
கோகுல், மதுரை கங்குலி bcci தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது நீக்க வேண்டும். கங்குலி இருக்குமிடம் ஒற்றுமை இருக்காது. ஆணவமும், அரசியலும் இருக்கும்.
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
14-ஜன-202219:58:38 IST Report Abuse
gopalasamy N கோலி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:33:49 IST Report Abuse
Tamilan .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X