பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 23,459 ஆக அதிகரித்துள்ளது : 9,026 பேர் நலம்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,459 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். 9,026 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 20,911 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,459 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,046 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,459 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டு உள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். 9,026 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 20,911 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,459 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,046 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,438 பேர், வங்கதேசத்திற்கு சென்று திரும்பிவர்கள் 9 பேர், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் சென்று திரும்பியவர்கள் தலா ஒருவர் மற்றும் மேற்குவங்கம், கர்நாடகம், உ.பி., தலா 2 பேர் பீஹார், சிக்கிம், திரிபுரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 23,459 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,91,959 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,92,64,199 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 13,940 பேர் ஆண்கள், 9,519 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 16,89,099 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 12,02,822 ஆகவும் அதிகரித்து உள்ளது. 9,026 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,36,986 ஆக உயர்ந்துள்ளது.
26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 11 பேரும் , அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,956 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை


சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,218 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.14 ம் தேதி) 8963 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X