சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 14, 2022 | |
Advertisement
'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல், தன் கட்சியினருக்கு அறிக்கை: பல ஆண்டுகளாகக் கதறியும் தீர்க்கப்படாத பிரச்னைகள், தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும், தெருவிலும் இருக்கின்றன. தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாக வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கின்றன.கடந்த மாதம் அடித்த பேய் மழையில் நனைந்து, நடந்து, நீந்தி அதிக சிரமப்பட்டு விட்டீர்களோ!பா.ஜ., பிரசாரக் குழு மாநில

பேச்சு, பேட்டி, அறிக்கை

'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல், தன் கட்சியினருக்கு அறிக்கை: பல ஆண்டுகளாகக் கதறியும் தீர்க்கப்படாத பிரச்னைகள், தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும், தெருவிலும் இருக்கின்றன. தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாக வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கின்றன.கடந்த மாதம் அடித்த பேய் மழையில் நனைந்து, நடந்து, நீந்தி அதிக சிரமப்பட்டு விட்டீர்களோ!

பா.ஜ., பிரசாரக் குழு மாநில தலைவர் குமரி கிருஷ்ணன் பேச்சு:
பஞ்சாப் மாநிலத்தில், பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு, அம்மாநில காங்கிரஸ் அரசும் கண்டனம் தெரிவிக்கவில்லை; தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்கவோ, 'டுவிட்டரில்' கருத்து வெளியிடவோ செய்யவில்லை.அரசியல்வாதிகள் அனைவருமே, நியாயம், மனசாட்சி, நேர்மை, நீதியிலிருந்து வழுக்கி, பல ஆண்டு காலம் ஆகி விட்டது. மதி மயக்கத்தில் உள்ளவர்களைத் திருத்த முயற்சிப்பது அறிவீனமே!


முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புத்தரிசி படைத்து பொங்கல் இடும் நாள், தமிழர்கள் இல்லமே பொங்கி வழியும் நாளாக அமைந்து வருகிறது. இந்த ஆண்டு புத்தாட்சி மலர்ந்த ஆண்டாக அமைந்திருப்பதால், மக்கள் மனதில் அரசியல் பூரிப்பும் இணைந்துள்ளது.மக்கள் மனம் பூரிப்படைந்துள்ளதா, இல்லையா என, இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு தெரியப் போகிறதே!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: இதுவரை, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு தொடுப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது என, தனிப்பட்ட மனிதர்கள் மீது அடக்கு முறைகளை ஏவிய பா.ஜ., அரசு, தற்போது மனித உரிமை அமைப்புகளையே முடக்கும் அளவுக்கு கொடுங்கோன்மையை அரங்கேற்றுகிறது.மனித உரிமை என்பது உங்கள் அகராதியில் என்ன என்பதை சற்று விளக்குங்களேன்!


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை:
வீட்டில் உள்ள பழைய பொருட்களை மட்டுமல்லாது, உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களையும், கடந்த கால வேதனைகளையும் தீயிலிட்டு, புதிய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் மனதில் புகுத்த வேண்டும்.ஆங்... சரி! அடுத்த தேர்தலுக்கு ஒரு கை பார்த்துருவோம்!


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X